பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்115


இதுவுமது

251. உதயநற் கிரி.யும் கண்டே

யுற்றுடன் றெற்திற் சென்று

பொதியமா மலையும் காணாப்

பொருவில்சீர்க் குடபா னின்ற

மதிகதி ரவியு மத்த

வான்கிரி கண்டு மீண்டும்

இதமுள தேசம் பார்த்தே

யினியதம் புரி.ய டைந்தார்.

(இ - ள்.) ஆங்கு ஞாயிறு தோன்றுமிடமாகிய மலையையும் அடைந்து அதன் அழகையும் கண்டு பின்னர் அவ்விடத்தினின்றும் தென்றிசையிற்போய் ஆண்டுள்ள பொதியமலைக் காட்சியையுங் கண்டு களித்து ஒப்பற்ற சிறப்புடைய மேற்றிசையிலே நிற்கின்ற திங்கள் மண்டிலமும் ஞாயிற்று மண்டிலமும் சென்று மறைதற்கிடமான உயரிய மறைமலையின் எழிலையுங் கண்டு மகிழ்ந்து மீண்டும் இன்பமுடை.ய வேறுபலநாட்டின் அழகுகளையும் கண்டு தமக்கினிய கோசம்பி நகரத்தை எய்தினர் என்க. (10)

நரவாகனன் பிறப்பு

252. மாதுதன் வயாநோய் தீர்ந்து

வளநகர் புக்க பின்பு

தீதின்றிக் கோள்க ளெல்லாஞ்

சிறந்துநல் வழியை நோக்கப்

போதினற் குமரன் றேன்றப்

புரவல னினிய னாகிச்

சோதிப்பொன் னறைதி றந்து

தூவினன் சனங்கட் கெல்லாம்.

(இ - ள்.) இவ்வாறு வாசவதத்தை வானத்தே பறந்து மகிழ்ந்து தனது மயற்கை நோய் தீரப்பெற்றுத் தீதின்றிக் கோள்களெல்லாஞ் சிறந்து நன்னெறி நோக்கி நிற்குமொரு நல்ல முழுத்தத்திலே அக்கோப்பெருந்தேவி வயிற்றில் அழகிய ஆண்மகவு பிறந்ததாக அச்செய்தியறிந்த வேந்தன் பெரிதும் மகிழ்ந்கவனாகி ஒளியுடைய பொன்னிறைந்த கருவூலத்தைத் திறந்து மாந்தர்க்கெல்லாம் பொன்னை வாரி வழங்கினன் என்க. (11)