பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்119


மானசவேகன் மதனமஞ்சிகையை வயப்படுத்த முயலுதல்

259. தன்னுடை நோயு ரைக்கத்

தையலு மோனங் கொண்டே

இன்னுயிர்க் கணவன் றன்னை

இனிமையி னினைத்தி ருப்ப

மின்னிடைத் தங்கை யான

வேகநல் வதியை யேவி

மன்னிய நிறை யழிக்க

வாஞ்சையின் விடுத்தா னன்றே.

(இ - ள்.) மதனமஞ்சிகையை எடுத்துப்போன வித்தியாதர மன்னன் அவளைத் தான்பாடும் காமத்துயரங்களைக் கூறித் தனக்குடம்படும்படி வேண்டாநிற்ப, கற்புமிக்க அக்காரிகைதானும் தன்னின்னுயிர்க் கணவனாகிய நரவாகனனையே நெஞ்சத்திருத்தியவளாய் அம்மானசவேகனுக்கு மறுமொழி யாதுங் கொடாளாய்வாளாவிருப்ப, அவளைத் தன்வயப்படுத்தும்பொருட்டுத் தன்தங்கையாகிய மின்னல்போன்ற இடையினையுடைய வேகவதி என்பவளை அம்மதனமஞ்சிகையின்பால் நிலைபெற்ற கற்பினையழிக்க ஏவினன் என்க. (18)

வேகவதி நரவாகனன் சிறப்பினைக்கேட்டு அவனைக் காமுறல்

260. அன்புற வவளுஞ் சொல்ல

வசலித மனத்த ளாகி

இன்புறுந் தன்னோர் நாத

னிந்திரன் போலு மென்னப்

பண்புணர் மொழியைக் கேட்டுப்

பரவச மனத்த ளாகி

நண்பொடு விசும்பின் வந்து

நரவாக னனைக்கண் டாளே.

(இ - ள்.) வேகவதி மதனமஞ்சிகையின்பாற்சென்று அவளை மானசவேகன்பால் அன்புற்று இணங்கும்படி பல்லாற்றானும் கூறவும், அவள் ஒரு சிறிதும் அசையாத மனத்தையுடையளாகி அவ்வேகவதிக்குத் தான் இன்புறுதற்குக் காரணமான ஒப்பற்ற தன் கணவன் இந்திரனையே ஒப்பானவன் என்று கூற, வேகவதி மதனமஞ்சிகை கூறிய அவள் கணவன் பண்புகளை அறிதற்குக் காரணமான மொழிகளைக் கேட்டவளவிலே மனநெகிழ்ந்து