அறுக்கும் சிறந்த முனிவனும் ஒளிவேலேந்தும்
உதயணவேந்தன் அன்புடைய நல்ல தந்தையுமாகிய சதானிகன்
கண்ணுற்றான் என்க.(27)
இதுவுமது
269. போதி தன்வலிப் போத வுணர்ந்துதன்
காத லிற்சென்று காளைதன் னாமமும்
ஏத் மில்தந்தை யெய்திய நாமமும்
போதச் செப்பலும் போந்து பணிந்தனன்.
(இ - ள்.) நரவாகனன் காட்டினிடை வீழ்ந்தமையை
அச்சதானிக முனிவன் தனது அவதி ஞானத்தால் நன்குணர்ந்து
தன் அன்புடைமை காரணமாகத் தானே வலிய அக்கோமகன்பாற்
சென்று அவனுடைய பெயரையும் குற்றமற்ற அவன் றந்தைக்
கெய்திய பெயரையும் நன்கு கூற, அவற்றைக் கேட்ட
நரவாகனன் வியந்து எழுந்துபோய் அவன் திருவடிகளிலே
வீழ்ந்து வணங்கினன் என்க. (28)
நரவாகனன் சதானிக முனிவனை வினவுதல்
270. தந்தை யென்முதல் தாமறிந் திங்குரை
அந்த மில்குணத் தையநீ ராரென
முந்து நன்முறை யாமுனி தாஞ்சொலச்
சிந்தை கூர்ந்து சிறந்தொன்று கேட்டனன்.
(இ - ள்.) பணிந்தெழுந்த அம்மன்னன்
முனிவனை நோக்கி “ஐய! என் தந்தை பெயரையும் என்
பெயரையும் யான் கூறு முன்பே அறிந்து இவ்விடத்தே
கூறுகின்ற தாங்கள் யார் என அறிய விரும்புகின்றேன்”
என்று வேண்ட, அதுகேட்ட முதன்மையுடைய நல்ல
துறவுநெறி நிற்கின்ற அம்முனிவர் தாமும் தம்மை
அறிவிப்பு. அதுகேட்ட நரவாகனன் மனமிகவும் மகிழ்ந்து
அம்முனிவனை ஒன்று வினவினன் என்க. (29)
இதுவுமது
271. விஞ்சை யம்பதி வெற்றிகொண் டாளுமென்
றஞ்ச மென்றநற் றக்கோ ருரையுண்டு
எஞ்ச லின்னிலை மையது வென்றென
விஞ்சு மாதவன் மெய்ம்மையிற் கூறுவான்.
(இ - ள்.) பெரியீர்! “என்னைச்
சுட்டி இவன் எளிதாகவே விச்சாதர நாட்டினை வென்றடிப்படுத்துவான்”
என்று கூறிய சான்றோர் மொழியுமொன்றுளது, குறைவற்ற
எனது அச்சிறப்பு
|