பக்கம் எண் :

124உதயணகுமார காவியம் [நரவாகன காண்டம்]


நிலைமை எனக்கெய்துவது எக்காலத்திலோ? கூறியருளுக! என்று வேண்ட, மிக்க பெரிய தவத்தையுடைய அச்சதானிகன் கூறலானான் என்க. (30)

முனிவன் கூறுதல்

272. வெள்ளி யம்மலை மேனின்ற ராச்சியம்
உள்ள தெல்லா மொருங்கே யடிப்படுத்
தெள்லில் செல்வமு மீண்டுனக் காமென்றான்
கள்ளவிழ் கண்ணிக் காளையுங் கேட்டபின்.

(இ - ள்.) “இளைஞனே! மேலோர் மொழி பொய்யாதுகாண்! அந்த வெள்ளிப் பெருமலையின் மேலமைந்துள்ள விச்சாதர நாட்டினை யெல்லாம் நீ அண்மையிலேயே ஒருசேர வென்று நின்னடிப் படுத்துவை காண் அதனால் இன்னே இளிவரவில்லா அப்பெருஞ்செல்வமெல்லாம் உனக்கு எய்துங்காண்!” என்று கூறினன். அவ்வினிய மொழியைத் தேன்றுளும்பும் மலர்மாலையினையுடைய அந்த நரவாகனன் கேட்டபின்னர்; என்க. (31)

நரவாகனன் இருமுதுகுரவர்க்கும் முனிவன் கூற்றை
அறிவித்தல்

273. மாத வன்விட வள்ள னகர்புக்குத்
தாதை தாய்முதற் றான்கண் டிருந்தபின்
தீது தீர்ந்ததுஞ் செல்வி பிரிந்ததும்
ஆத ரித்தவர்க் கன்னோன் விளம்பினன்.

(இ - ள்.) பெருந்துறவியாகிய சதானிகன் விடைகொடுத்த பின்னர் வள்ளலாகிய அந்நரவாகனன் அக்காட்டினின்றும் போய்த் தன் தந்தை தாய் முதலியோரைக் கண்டு வணங்கி இனிதே யிருந்த வழி, அவர்கட்கெல்லாம் மதனமஞ்சிகை பிரிந்தமையையும், தனக்கு மானசவேகனாலே தீமை வந்து உடனே தீர்ந்துபோனமையையும் இருமுதுகுரவர்க்கும் அந்நரவாகனன் அறிவித்தனன் என்க. (32)

இதுவுமது

274. மேனி கழ்வென மெய்த்தவர் கூறின
தான வின்றுதன் றாய்துயர் தீர்த்தனன்
வானு ழைச்செல்லு மன்னிய தேர்மிசை
ஈன மில்கும ரன்னினி தேறினான்.