(இ - ள்.) இவ்வாற்றால் தவப்பள்ளியிலிருந்த
விக்கிரம வேந்தன் அப்பள்ளியிலிருக்கின்ற
உதயணகுமரனையும் யூகியையு நோக்கி வியப்புற்று ‘முனிவர்
பெருமானே! காண்டற்கினிய
தோற்றமுடைய இச்சிறுவர்கள் யார்? என்று வினவ,
பெருமையுடைய அம்முனிவனும் அவர்கள் வரலாற்றினை
விக்கிரமனுக்கு அறிவித்தருளுதலாலே, உதயணன் தன்
தங்கை மகனென்றறிந்தமையாலே பெரிதும் மகிழ்ந்து
தந்தையாகிய சேடகமுனிவனைப் பின்னும் தொழுது,
பெரியீர்! உதயணன்
வரலாறு அறிந்தவுடன் என் நெஞ்சம் என்னுடைய தாயப்
பொருள் முழுவதையும் அச்செல்வனுக்கே வழங்கி என்நாட்டிற்கு
அரசனாக்கித் தலையிலணிகின்ற முடியுஞ் சூட்டி, என்நாட்டிற்குப்
போகச் செய்துவிட்டு உன்னோடு பண்டே கலந்த தவவொழுக்கத்தையே
மேற்கொள்ள விரும்புகின்றது என்று விண்ணப்பித்தான்.
(20)
உதயணன் அரசுரிமை பெறுதல்
23. முனியொடு தங்கை தன்னை
முயன் றிரந் தெய்தி நாகம்
தனையன வெங்க யத்திற்
றனையனை யேற்றிப் போய்த்தன்
மனனிறை நாட்டை யந்த
மருகனுக் கீந்து போந்து
முனிவனம் புகுந்து மாமன்
முனிவனாய் நின்றா னன்றே.
(இ - ள்.) மாமனாகிய விக்கிரம மன்னன்
தன்னெண்ணத்தைச் சேடக முனிவன் பாற் கூறிப்
பெரிதும் முயன்று உதயணனையும் மிருகாபதியையும் தன்னுடன்
உய்க்கும்படி வேண்டிப் பெற்று மலையை ஒத்த அந்த வெவ்விய
தெய்வயானையில் உதயணனையும் (சிவிகையில்) மிருகாபதியையும்
ஏற்றிச் சென்று தன் மனத்திற்கு அதுகாறும் நிறைவுதந்த
தனது நாட்டினை உதயணனாகிய அந்த மருமகனுக்கு வழங்கித்
துறவியாகி முனிவர்களுறைகின்ற தொரு காட்டிற் புகுந்து
தவமேற் கொண்டிருந்தனன் என்க. (19)
சதானிகன் மிருகாபதியைக் காண்டல்
24. இளமையை இகந்து மிக்க
வினியநற் குமர னாகி
வளமையிற் செங்கோ றன்னை
வண்மையி னடத்தி னானாங்
|