பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்131


இந்திரன் நரவாகனனை யுவந்து சக்கரநிதி முதலிய ஒன்பது வகை நிதிகளையும் எண்ணாயிரம் மகளிரையும் வழங்க, அவற்றைத் தேவர்கள் கொணர்ந்து நரவாகனனுக்கு வழங்கி வணங்கினர் என்றவாறு, தோம் - குற்றம், எண்ணாயிரம்: மகளிர்க்கு ஆகுபெயர் மேல்-294 ஆம் செய்யுளில் ‘எண்ணாயிரமான தேவியர்’ எனவருவதூஉ முணர்க. (50)

நரவாகனனைச் சக்கரப் படை வந்து வணங்கல்

292. சக்க ரம்வலம் சார்ந்தி றைஞ்சின
மிக்க புண்ணியன் மீட்டு வந்துடன்
தக்க விஞ்சையர் தம்ப தியெல்லாம்
அக்க ணத்தினி லடிப்ப டுத்தினன்.

(இ - ள்.) சக்கரப் படைகளும் நரவாகனனை வலம் வந்து வணங்கி அவன் ஏவல்வழி நிற்பச் சமைந்தன. இப்பேறுகளையெல்லாம் பெற்ற மிக்க அறவோனாகிய அந்நரவாகனன் மீண்டும் வித்தியாதர நாட்டிற்கு வந்து அப்பொழுதே தகுதியுடைய அவ்விச்சாதர நகரங்களை யெல்லாம் வென்று தன் னடிப்படுத்தினன் என்க. (51)

நரவாகனன் வாகைசூடி வருதல்

293. விஞ்சை யர்திறை வெற்றி கொண்டவன்
தஞ்ச மென்றவர் தரத்தின் வீசியே
எஞ்ச லில்புர மிந்தி ரன்னென
மிஞ்ச மாளிகை வீரன் சென்றனன்.

(இ - ள்.) விச்சாதர வேந்தரை யெல்லாம் வென்று திறைப்பொருளும் பெற்ற வீரனாகிய நரவாகனன் அப்பொருளை யெல்லாம் தன்னைத் தஞ்சம் என் றடைந்தவர்க் கெல்லாம் வாரி வழங்கிக் குறைவில்லாத கந்தருவ புரத்தின் கண்ணே இந்திரனேபோல வீறு பெற்றுயர்ந்த அரண்மனைக்கட் சென்றான் என்க. (52)

நரவாகனன் அரசு வீற்றிருத்தல்

294. மதன மஞ்சிகை மனங்கு ளிர்ந்திட
விதன மின்றிநல் வேக வதியுடன்
அதிக போக வநங்க விலாசனை
அதிக வெண்ணா யிரமான தேவியர்.

(இ - ள்.) மானசவேகனால் மீண்டும் கணவனுடன் சேர்க்கப்பட்ட மதன மஞ்சிகை தானும் பெரிதும் மனமகிழா நிற்பவும், நரவாகனன் துன்பம் சிறிதும் இன்றி வேகவதி நல்லாளுடனும்