அம் மதன மஞ்சிகையோடும் அநங்க
விலாசனையோடும் எண்ணாயிரந் தேவ மகளிரோடும்
கூடி மிக்க வின்ப மெய்தி என்க. (53)
இதுவுமது
295. இனிய வேள்வியா லின்ப மார்ந்துபின்
இனிய புண்ணிய மீண்டி மேல்வரத்
தனிய ரசினைத் தானி யற்றியே
நனிய தொன்றினன் னாம வேலினான்.
(இ - ள்.) பின்னரும் தேவர்கட்
கினியனவாகிய அறக்கள வேள்விகள் பலவும்
செய்யுமாற்றானும் பேரின்ப மெய்திப் பின்னரும்
அவ் வறப்பயனெலாம் ஒருங்கு கூடி மேன்மேல்
வருதலாலே ஒப்பற்ற அரசாட்சியினையும் செய்து
பகைவர்க்கு அச்சந்தரும் வேலினையுடைய
அந்நரவாகனன் பேரின்ப வாழ்விலே மிகவும்
பொருந்தினன் என்க. (54)
நரவாகனன் தந்தையைக் காணவருதல்
296. விஞ்சை யர்தொழ வீறுந் தேவியர்
பஞ்சின் மெல்லடிப் பாவை மாருடன்
மஞ்சு சூழ்மலை விட்டு வானவர்
தஞ்ச மானதன் தந்தை பாற்சென்றான்.
(இ - ள்.) விச்சாதர மன்னர்
அடிவணங்கி வாழ்த்தி வழி விடாநிற்ப அந்நரவாகன
மன்னவன் வீறுடைய தன் மனைவிமாராகிய
அலத்தகமூட்டிய மெல்லிய அடியினையுடைய பாவைபோல்
வாரோடு முகில் சூழ்கின்ற அவ்
வெள்ளிமலையினின்றும் தேவருக்கும் புகலிடமாகத்
திகழுகின்ற தன் தந்தையாகிய உதயணகுமரன் பால்
வந்துற்றனன் என்க. (55)
இதுவுமது
297. புரம திக்கப்பூ மாலை தோரணம்
வரம்பி னாற்றியே வான்கொ டிம்மிடை
அரும்பு மாலைவே லரசன் சென்றெதிர்
விரும்பிக் கொள்ளவே வியந்து கண்டனன்.
(இ - ள்.) அக்கோசம்பி நகரம்
நரவாகனன் வருகையை நன்கு மதியாநிற்ப மலர்மாலை
தூக்கியும், தோரணம் கட்டியும் நகரத்தை
அணிசெய்து உயரிய கொடி முதலியன நெருங்கிவர
நாண்மலர் மாலையணிந்த உதயணவேந்தன் அவன்
வருகையைப்
|