பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்133


பெரிதும் விரும்பி எதிர்சென்று வரவேற்ப நரவாகனனும் அவர்தம் வரவேற்பினைக் கண்டு வியந்து தன் தந்தையைக் கண்டு வணங்கினன் என்க. (56)

நரவாகனன் தந்தைதாயரை வணங்கல்

298. தந்தை தாய்பதந் தான்ப ணிந்தபின்
இந்து வாணுத லெழின்ம டந்தையர்
வந்து மாமனை வணங்கி மாமியை
அந்த மில்வனத் தடியி றைஞ்சினார்.

(இ - ள்.) நரவாகனன் தன் தந்தைதாய் திருவடிகளை வணங்கியபின்னர்த் திங்கள் மண்டிலம் போன்று ஒளி திகழுந் திருநுதலையும் அழகையுமுடைய தேவிமாரும் வந்துமுற்பட மாமடிகளாகிய உதயணகுமரனை வணங்கிப் பின்னர் வாசவதத்தையின் எல்லையற்ற அழகுடைய திருவடிகளிலே வீழ்ந்து வணங்கினர் என்க. வனம் - அழகு. (57)

உதயணன் செயல்

299. மகிழ்ந்து புல்லியே மனைபு குந்தபின்
நெகிழ்ந்த காதலா னேமிச் செல்வனும்
மிகுந்த சீருடன் வீற்றி ருந்தனன்
மகிழ்ந்து மைந்தரை வரவ ழைத்தனன்.

(இ - ள்.) மாமிமார் மருகிமாரை மகிழ்ந்து தழுவி வாழ்த்திய பின்னர்ச் சக்கரவர்த்தியாகிய உதயணன் மிக்க புகழுடனே இனிதே யிருந்தனன், பின்னொருநாள் உதயணன்றானும் பெரிதும் மகிழ்ந்து நரவாகனன் முதலிய தன் மைந்தர்களை அவையின்கண் வரவழைத்தனன் என்க. (58)

பதுமாபதியின் மைந்தனாகிய கோமுகனுக்கு முடிசூட்டல்

300. பதுமை தான்மிகப் பயந்த நம்பியாம்
கொதிநு னைவேலின் கோமு கன்றனை
இதம ளித்திடு மிளவ ரைசென
அதுல நேமிய னரசு நாட்டினான்.

(இ - ள்.) அம்மைந்தருள் வைத்துப் பதுமாபதி ஈன்ற செல்வனாகிய கொதிக்கும் நுனையையுடைய வேலையுடைய கோமுகன் என்னும் நம்பியின் முகநோக்கி “மைந்தனே! இனி நீ நமது வத்தவ நாட்டின் இளவரசனாகி இன்புறப் பாதுகாத்திடுக!” என்று பணித்து