பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்135


ஆறாவது

துறவுக் காண்டம்

உதயணகுமரன் தவம்புரியக் கருதுதல்

303. வளங்கெழு வத்த வற்கு

மன்னிய காதன் மிக்க

உளங்கெழு கற்பி னார்க

ளோதிமம் போலு நீரார்

இளங்கிளி மொழியி னார்க

ளினிமையி னால்வ ரோடும்

துளங்கலி றிருமின் போர்மின்

தூயசொன் மடந்தை தாமும்.

(இ - ள்.) எல்லா வளங்களும் பொருந்திய வத்தவ நாட்டு மன்னனாகிய உதயணகுமரனுக்கு நிலைபெற்ற காதற் பண்பு மிக்க நெஞ்சம் பொருந்திய கற்புடையவரும் அன்னம்போலும் நடையினையுடையவரும் இளங்கிளிபோலும் மழலை மொழியினை யுடையவரும் இனிமை மிக்கவருமாகிய வாசவதத்தை, பதுமாபதி, மானனீகை, விரிசிகை என்னும் மனைவிமாராகிய நான்கு நங்கைமாரோடும் அசைதலில்லாத திருமகளும், வெற்றிமகளும், தூய சொல்லையுடைய கலைமகளும் என்க. (1)

இதுவுமது

304. மண்ணியன் மடந்தை யோடு

மருவினார் மிக்க மன்னன்

புண்ணிய முன்னாட் செய்த

போதந்தே யுதவி செய்ய

எண்ணிய கரும மெல்லா

மியைபுட னாகப் பின்னும்

புண்ணிய நோன்பு நோற்கப்

பொருந்திய மனத்த னானான்.

(இ - ள்.) நிலமகளும் ஆகிய நான்கு மகளிரும் வந்து சேர்ந்தனர்; இவ்வாற்றாற் பெருஞ் சிறப்புற்ற வேந்தன் யாம் இத்தகைய சிறப்புக்களை யெல்லாம் எய்தி இன்புறும்படி யாம் முற்பிறப்பிலே