பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்141


கீடாகக் கொண்டு வந்த அந்தச் சாரணப் பெரியோர் அற்றைநாள் அந்தக் கோசம்பி நகர்க்கண் வந்து அக்களிற்றியானை அழிக்க முயலுமொரு பூம்பொழிலிலே புகுந்துறைந்தனர் என்க. (16)

அச்சாரணர் மாண்பு

319. இனம லர்மிசை யேகு வார்களும்
புனல லைமிசைப் போகு வார்களும்
கனிகள் காய்மிசை காணுஞ் சாரணர்
இனிய நூன்மிசை இசைந்து செல்வரும்.

(இ - ள்.) கூட்டமாகிய மலர்மிசைச் செல்வதனாலே ‘புட்ப சாரணர்’ எனப்படுவோரும், நீர் அலையின்மேற் செல்வதனாலே ‘சல சாரணர்’ எனப்படுவோரும், கனி காய்களின்மேற் காணப்படுதலாலே ‘பலசாரணர்’் எனப்படுவோரும், இனிய நூன்மிசைச் செல்வதனாலே ‘தந்துசாரணர்’ எனப்படுவோரும் என்க. (17)

இதுவுமது

320. மலைத்த லைமிசை வானிற் செல்வரும்
நிலத்தி னால்விர னீங்கிச் செல்வரும்
தலத்தி னன்முழந் தரத்திற் செல்வரும்
பெலத்தின் வானிடைப் பெயர்ந்து செல்வரும்.

(இ - ள்.) இலையுச்சியின்மேலே வானத்தே செல்வதனாலே ‘ஆகாயசாரணர்’் எனப்படுவோரும், நிலத்தினின்றும் நால்விரன் மேலே செல்வதனால் ‘சதுரங்குல சாரணர்’் எனப்படுவோரும், நிலத்தினின்றும் நன்மையுடைய ஒரு முழம் உயரத்தே செல்வதனால் ‘தலசாரணர்’் எனப்படுவோரும், மலைமுழைஞ்சுகளிலே கூடியிருந்து வானத்தே செல்வதனால் ‘சங்கசாரணர’் எனப்படுவோரும் என்க. (18)

இதுவுமது

321. மலைமு ழைஞ்சுண் மன்னி னான்மறை
உலகெ லாமவ ரொருங்கி டவிடும்
அலம தீரவே வறம ழைபெய்யும்
மலம றுந்தர மாமு னிவரும்.

(இ - ள்.) மலைமுழைஞ்சுகளிலே நிலைபெற்று நைவாரேனும் நான்கு மறைப்பொருளையும் உலகெலாம் வாழும் மாந்தர் மனம் ஒருங்கிக் கேட்குமாறும் அவர்க்கு ஊழ்வினை கூட்டுகின்ற துன்பங்களை அறுக்க அறமாகிய மழை பெய்கின்ற முகில்போல் வாடும்