பக்கம் எண் :

142உதயணகுமார காவியம் [ துறவுக காண்டம்]


துன்பற்ற மெய்யுணர்வுடைய தகுதியையுடைய முனிவர்களும் என்க.(19)

இதுவுமது

322. பக்க நோன்புடைப் பரம மாமுனி
மிக்க பாணிமீ தடிசின் மேதினி
புக்கு முண்டிடப் போது வார்பகல்
தக்க வர்குணம் சாற்ற ரிதென்றே.

(இ - ள்.) பல பகுதிகளையுடைய நோன்பை மேற்கொண்ட மேலான முனிவராகிய இவர்கள் மிகவும் தமது கைகளிலேயே உலகின்கண் இல்லறத்தாரிடம் சென்று பிச்சைபுக் குண்ணற்பொருட்டு ஒரொருகாற் பகற்பொழுதிலே போவர், தகுதியுடைய இவர்தம் மாண்பினைக் கூறிக் காட்டல் அரிதாம் என்க. (20)

தருமவீரர் அறங் கூறல்

323. தரும வீரரென் றவருட் டலைவன்பால்
வெருவருந் துன்ப விலங்கும் வாழ்க்கையை
மருவி யோதவே வந்த யாவரும்
திருமொ ழியினைத் திறத்திற் கேட்டனர்.

(இ - ள்.) அச்சாரணர் குழுவினுட் டலைவராகிய தருமவீரர் என்பவர் அஞ்சத்தகுந்த பிறவித் துயரந் தீர்தற்குரிய மெய்யாய வாழ்க்கையை எடுத்து ஓதாநிற்ப அத்தலைவன்பால் ஆங்குவந்தவர் எய்தி அவர் கூறுகின்ற அழகிய அறமொழிகளைக் கேட்பாராயினர் என்க. வந்த யாவரும் தலைவன்பால் மருவிக் கேட்டனர் என்று கூட்டுக. (21)

யானையின் செயல்

324. வருந்த சைநசை வானிற் புள்ளுகள்
இரைந்து மேலுங்கீ ழினும்ப டர்ந்திடப்
பருந்து முன்னும்பின் பரந்து செல்லவும்
விருந்த வையுண விட்ட தியானையே.

(இ - ள்.) ஊனுண்ணும் விருப்பத்தோடு வானிற் பறந்து வரும் பறவைகள் ஆரவாரித்து மேலும் கீழுமாய்த் தன்னைச் சூழ்ந்து வாராநிற்பவும் பருந்துகள் முன்னும் பின்னும் பரவிப் பறந்து வரவும் அவையெல்லாம் விருந்துண்டு மகிழும்படியும் அக்களிற்றியானை உயிரினங்களைக் கொன்று அவற்றின் ஊன்களை வழங்கியது என்க. (22)