அந்த யானை சாரணர் அறவுரை கேட்டுத் தன்
பழம் பிறப்பினை யுணர்தல்
325. கூற்றெ ழுங்கரி கொதித்தே ழுந்ததால்
ஆற்ற லம்முனி யறவு ரையுற
ஏற்ற ருஞ்செவி யிறைஞ்சித் தன்னுடை
மாற்ற ரும்பவ மறித்து ணர்ந்ததே.
(இ - ள்.) மறவிபோன்றெழுந்து
உயிரினங்களை அழிக்கும் அக்களிற்றியானை
அவ்வறங்கேட்கும் குழுவினரைக் கண்டு மேலும் சினந்து
அக் கூட்டத்தை நோக்கி வந்துழி அங்குத்
தவவாற்றல்மிக்க அத் தருமவீரர்
திருமாய்மலர்ந்தருளிய அறவுரை ஆகூழுண்மையின்
அக்களிற்றியானையின் செவியிற் புகுதலாலே அதனை
ஏற்று அம் முனிவனை வணங்கி மாற்றுதற் கரிய தனது
பிறப்பின் வரலாற்றினை மீண்டும் உணர்வதாயிற்று
என்க. (23)
களிறு தன் செயலுக்கு வருந்துதல்
326. குருதியாறிடக் கொன்ற தீவினை
வெருவு துக்கமும் விலங்கி னுய்த்திடும்
அருந ரகினு ளாழ்ந்து விட்டிடும்
பெருந்து யரெனப் பேது றுக்குமே.
(இ - ள்.) ஊழ்வினை காரணமாகத்
தருமவீரருடைய அறவுரைகளைச் செவியேற்ற அக்களிறு
தமது அறியாமையாலே குருதி ஆறாகப் பெருகி ஓடும்படி
தான் உயிரினங்களைக் கொன்றமையாலே
தனக்கெய்திய தீவினையானது அஞ்சத்தகுந்த
துன்பத்தையும் மேலும் விலங்குப பிறப்பினையும்
கொடுக்குமே என்றும், பெருந்துயருக்குக் காரணமான
அரிய நரகத்தினும் அழுத்திவிடுமே என்றும் எண்ணிப்
பெரிதும் வருந்தியது என்க. (24)
களிற்றியானை மெய்யுணர்வெய்தி
அமைதியுறுதல்
327. நெஞ்சு நொந்தழு நெடுங்க ணீருகும்
அஞ்சு மாவினுக் கறிவு தோன்றிடக்
குஞ்ச ரம்மினிக் கோன கருன்னி
இஞ்சி வாய்தலி னெய்தி நின்றதே.
(இ - ள்.) இவ்வாறு தன்
பிறப்புணர்ந்த அக் களிற்றியானை தான் செய்த
தீவினையை எண்ணி உளம் நொந்து கண்ணீர்
சொரிந்து தன்னுள் அழுது அஞ்சாநிற்கும;் இங்ஙனம்
அக்
|