பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்145


அரசனுடைய குறிப்புணர்ந்து “பெருமானே! இக் களிறு பெரிய தவத்தையுடைய துறவோர்தம் அறவுரையைக் கேட்டமையாலே இவ்வாறமைதி பெற்றதுகாண்! ஆதலால், நீ அதன்மேல் ஏறி.யருளுக!” என்று கூறினன் என்க. (27)

களிற்றியானை உதயணனை முனிவர்பாற் கொண்டு போதல்

330. வேந்தனுங் கேட்டு வந்து

வெண்கோட்டி னடிவைத் தேறிச்

சேந்தன னெருத்தின் மீதிற்

றிரும்பிக்கொண் டேகி வேழம்

பூந்தளிர் நிறைந்தி லங்கும்

பொழில்வலஞ் சுற்ற வந்து

காந்துநன் மணிப்பூண் மார்பன்

கைம்மாவிட் டிழிந்தா னன்றே.

(இ - ள்.) யூகியின் மொழிகேட்ட வுதயணகுமாரனும் மகிழ்ந்து அக்களிற்றின் வெள்ளிய மருப்பிலே அடிவைத்தேறி அதன் பிடரிலே இனிதாக இருப்ப அக்களிறு தானும் அம்மன்னனையும் தன்மிசை கொண்டு திரும்பிச் சென்று பூவுந்தளிரும் நிறைந்து திகழ்கின்ற அம்முனிவருறையும் பூம்பொழிலை வலஞ் சுற்றிவந்து அம் முனிவர் முன்னிற்க; ஒளி வீசுகின்ற அழகிய மணிப்பூண் அணிந்த மார்பையுடைய அம் மன்னனும் அக்களிற்றியானையினின்றும் இறங்கினன் என்க. சேர்ந்தனன் - இருந்தனன். (28)

உதயணகுமரன் அத்துறவோர்பால் அறங்கேட்டல்

331. விரைகமழ் பூவு நீரும்

வேண்டிய பலமு மேந்திப்

பரிசனஞ் சூழத் சென்று

பார்த்திப னினிய னாகி

மருமலர் கொண்டு வாழ்த்தி

மாதவ ரடியி றைஞ்ச

இருவென விருக்கை காட்ட

விருந்துநல் லறத்தைக் கேட்டான்.

(இ - ள்.) களிற்றினின்று மிறங்கிய காவலன் அப்பொழுது மணங்கமழுகின்ற புதுமலரும் நன்னீரும் அம்முனிவர் உண்ண வேண்டிய பழங்களும் ஏந்திக்கொண்டு தன் பரிசனம் தன்னைக்

உத--10