பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்149


இதுவுமது

339. காமங் கள்ளுண்டு கைவிட லின்றியே
தாம நற்குழ லாடுணை யாகவும்
யாம மும்பக லும்மறி யாதவன்
ஆமர ணத்தின்பி னானைய தாயினன்.

(இ - ள்.) “மேலும் அப்பார்ப்பனன் காமத்தோடு கள்ளுமுண்டு அக்கணிகையைக் கைவிடுதலின்றி மலர்மாலை யணிந்த கூந்தலையுடைய அக்கணிகையே தனக்குறுதுணையாகும்படி பகலிது இரவிது என்று எண்ணாது அவளோடு கிடந்தவன் இயல்பாக உண்டாகும் சாவின் பின்னர், அத்தீவினை காரணமாக இக் களிறாகிய விலங்குப் பிறப்பெய்தினன்” என்றார் என்க. (37)

முனிவர் உரைகேட்ட முடிமன்னன் செயல்

340. அந்நிலை யுணர்ந் தடங்கியதென்றனர்
மன்னன் கேட்டுடன் வந்துநற் பாகர்க்குச்
சொன்ன யானையைத் தூயநீ ராட்டெனும்
அன்னம் பானெய்யி னன்புட னூட்டெனும்.

(இ - ள்.) “பண்டுசெய்த நல்வினை காரணமாக ஈண்டு யாம் கூறிய அறவுரையைக் கேட்புழித் தன் பழம்பிறப்புணர்வு வரப்பெற்று இவ்வாறு அடங்கியது காண்” என்று அறிவித்தனர், அக்களிற்றின் வரலாற்றினைக் கேட்டதுணையானே உதயணன் அதன்பாலிரக்க முடையவனாய்த் தன் அரண்மனை யடைந்து ஏவலரை விளித்து இக் களிற்றினைத் தூய நீரிலே ஆட்டுவீராக! வென்றும், அதற்கு அன்போடு பாலும் நெய்யுங் கலந்து கவள மூட்டுமின்! என்றும் கட்டளையிட்டான் என்க. (38)

இதுவுமது

341. கவள நாடொறு மூட்டெனுங் காவலன்
பவள மாமெனும் பண்ணவர் தம்மடி
திவளு மாமுடி சேர்த்து வணங்கியே
உவள கத்துன்னி மற்றொன்று கேட்டனன்.

(இ - ள்.) அன்பு காரணமாக அக் களிற்றியானைக்கு இனிய கவளத்தை நாள்தோறும் ஊட்டுக! என்று கட்டளையிட்ட அம்மன்னவன் மீண்டும் சென்று அத்தரும வீரருடைய பவளம் போன்று சிவந்த திருவடிகளில் ஒளி திகழ்கின்ற சிறந்த முடியையுடைய தன்றலையினைச் சேர்த்தி வணங்கித் தன்னெஞ்சம் உழலு