(இ - ள்.) “எம்மருமை வாழ்க்கைத்
துணைவியீர்! யான் அழகிய இம் மனைவாழ்க்கையைத்
துறந்து தவமேற்கொண்டு செல்வேன்; ஆகலின் நீயிர்
வேண்டியதியாது? கூறுமின!்” என்று வினவ, மின்போன்ற
நுண்ணிடையை யுடைய அத் தேவிமார் தாமும், “புரவலனே!
எமக்கும் தவத்தின்மேற் செல்வதே பொருளாகும்;
ஆகவே நும்முடனே வந்து யாமும் எமக்காகும் குற்றமற்ற
சிறந்த தவத்தையே கேற்கொள்வேம்” என்று
கூறினர் என்க. (55)
தேவிமாரும் அமைச்சரும் அரசனுடன்
செல்லுதல்
358. உருமண்ணு விடபகன்
யூகிநல் வயந்தகன்
பொருவினா லமைச்சரும்
பொற்பரசன் மாதரும்
மருவுநன் மலர்ப்பொழில்
வண்மைவலங் கொண்டுமிக்
கருண் முனிவர் பாதத்தி
லன்புடன் பணிந்தனர்.
(இ - ள்.) பொலிவுமிக்க அரசனுடைய
தேவிமாராகிய வாசவதத்தை, பதுமாபதி, மானனீகை,
விரிசிகை என்னும் நால்வரும் ஒப்பற்ற
அமைச்சராகிய யூகி உருமண்ணுவா இடபகன் வயந்தகன்
என்னும் நால்வரும் ஆகிய எண்மரும் உதயண மன்னனுடனே
சென்று தருமவீரர் என்னும் முனிவர் உறையும்
வளமிக்க நல்ல மலர்ப் பொழிலை வலமாக வந்து
மிக்க அருளைப் பொழிகின்ற அம்முனிவர்
திருவடிகளிலே வீழ்ந்து அன்புடன் வணங்கினர் என்க.
(56)
உதயணன் முனிவரைத் தவந்தர வேண்டல்
359. நாத்தழும்ப மன்னனு
நயமுறு மினிமையின்
தோத்திரங்கள் கொண்டுமீத்
தொடுத்தொலியின் வாழ்த்தியே
ஏத்தற முரைத்தி்ட
வினிமைவைத்துக் கேட்டனன்
ஏத்தரிய நற்றவமு
மெங்களுக் களிக்கென்றான்.
|