பக்கம் எண் :

158உதயணகுமார காவியம் [ துறவுக காண்டம்]


(இ - ள்.) உதயணன் முதலியோர் ஆறுவகைப்பட்ட சீவ நிகாயங்களையும் அருட்பண்பு மிக்குப் பாதுகாத்தும் பொறிகளைப் புலன்களிற் செல்லாமல் மனத்தினுள்ளடக்கியும், அறமாகிய சிறந்த நோன் புகட்கெல்லாம் அறிகுறியாகிய உண்ணாமை முதலிய நோன்புகளைக் கண்டோர் இவர் போல ஆற்றுதல் பிறர்க்கரிதாம் என்னும் படி ஆற்றிக் குற்றமற்ற தியானத்திருத்தலாலே அவர் உள்ளமும் நன்கு தெளிந்தன என்க. (59)

இதுவுமது

362. புறத்தினும் மகத்தினும்

போகத்தொடர்ப் பாடுவிட்

டறத்திடை யருளினா

லாருயிரை யோம்பியும்

திறத்துடன் சமிதியும்

சிந்தையி னடக்கமும்

திறத்திறத் துணர்ந்துபின்

றியானமுற்றி னார்களே.

(இ - ள்.) புறத்திலும் உள்ளிலும் இன்ப நுகர்ச்சியின் தொடர்ப்பாட்டினை விட்டு அறத்தினுள் வைத்து அருளுடைமை யாலே அரிய உயிரினங்களைப் பாதுகாத்தும் ஆற்றலோடு ஈர்யாச மிதி பாடணாசமிதி ஏடணாசமிதி ஆகான நிக்கேப சமிதி உச்சர்க்க சமிதி என்னும் ஐவகைத் துறவாசாரங்களையும் மனவடக்கத்தையும் படிப்படியாக வுணர்ந்து பின்னர்த் தியானத்தாலும் முதிர்வு பெற்றனர் என்க. (60)

இதுவுமது

363. ஒருவகை யெழின்மன

மிருவகைத் துறவுடன்

மருவுகுத்தி மூன்றுமே

மாற்றிநான்கு சன்னையும்

பொருவிலைம் புலம்மடக்கிப்

பொருந்தியவா வச்சமூ

விருவகைச் செவிலியு

மெழுவரையும் வைத்தனர்.

(இ - ள்.) ஒருவழிப்படுத்த அழகிய மனமும் உட்டுறவும் புறத்துறவும் என்னும் இருவகைத்துறவும் அத்துறவோடு பொருந்திய மனவடக்கம் மொழியடக்கம் மெய்யடக்கம் என்று கூறப்படும்