பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்27


பிரச்சோதனன் மகளாகிய வாசவதத்தை கனாக்காண்டல்

61. காசி றேர்மிசைக் காவ லுடன்செலப்
பேச ரும்பெரு மைப்பிரச் சோதனன்
ஆசை யின்மக ளாடகப் பாவைபோன்ம்
வாச வதத்தை வண்மைக் கனவிடை.

(இ - ள்.) பிரச்சோதனன் அமைச்சனாகிய சாலங்காயனும் மறவரும் கட்டுண்ட உதயணனைக் குற்றமற்றவொரு தேரிலேற்றிப் பெரிதும் பாதுகாப்புடன் உஞ்சை நகர்க்குச் செல்வாராக! இனி அவ்வுஞ்சை நகரத்தின்கண் சொல்லொணாத சிறப்பினையுடைய அப்பிரச்சோதன மன்னவனுடைய பேரன்பிற்கெல்லாம் கொள்கலனாயமைந்த நன்மகளும் பொற்பாவைபோல்பவளுமாகிய வாசவதத்தை நல்லாள் துயிலிடையே தோன்றிய வளப்ப மிக்கதொரு கனவின்கண் என்க. (57)

62. பொங்கி ளங்கதிர் போந்த தமளியில்
கொங்கை யைத் தழீஇக் கொண்டு டன்செல
நங்கை கண்டுநற் றாதைக் குரைத்தனள்
அங்கந் நூலின றிந்தவர்க் கேட்டனன்.

(இ - ள்.) ஒளிமிகுமிளமையுடையதொரு ஞாயிறு தன்னெதிர் வந்தது; அது கையிடத்தே தன் கொங்கைகளைத் தழுவிக் கொண்டு தன்னையும் அழைத்துக்கொண்டு அப்பொழுதே போகக் கனவு கண்டு அந்தவாசவதத்தை இவ்வினிய கனவினைத் தன் அன்புடைய தந்தைக்குக் கூற அவ்வரசனும் அப்பொழுதே அக்கனவினைக் கனா நூலறிந்த மேலோர்க்குச் சொல்லி அதன் பயன் யாதென வினவினன் என்க. (58)

ஆசிரிய விருத்தம்

63. இவண்மு லைக்கி யைந்தநல்

லெழின்ம ணம்ம கன்வந்தே

துவளி டையி ளமுலை

தோய்ந்து கொண்டு போமென

அவள்க னவு ரைப்பக்கேட்

டண்ண லும்ம கிழ்ந்தபின்

திவளு மாலைத் தேர்மிசைச்

செம்மல் வந்த டைந்தனன்.

(இ - ள்.) கனா நூலறிந்தவர் ‘பெருமானே! இவ்வாசவதத்தை இளமுலைப் போகந் துய்த்தற்கியைந்த ஆகூழையுடையா