(இ - ள்.) உருமண்ணுவாவினோடு இடபகனும்
முறையே சயந்தி நகரத்தையும் செல்வம் நிறைந்த
புட்பக நகரத்தையும் எய்தி இனிதாக ஆட்சி புரிந்திருப்பாராக!
எம்பெருமான் சதானிக வேந்தனுடைய கணிகை மக்களோடு
இளங்கோக்களாகிய பிங்கல கடகர்கள் கௌசாம்பியிலிருந்து
நமதரசாட்சியினை நிலைநிறுத்தி
ஆள்க என்றும் கூறி அன்புடனே அந்நகரங்களை அவர்க்கு
வழங்கினன் என்க. உதயணன் ஆட்சி யூகியின் கண்ணதாகலின்
அவன் வழங்க வேண்டிற்று. (64)
யூகியின் சூழ்ச்சி
69. மன்ன வற்கி ரங்கியூகி
மரித்த னனென் வார்த்தையைப்
பன்னி யெங்க ணும்முறை
பரப்பி வைய கந்தன்னில்
அன்ன தன தொப்புமை
யமைந் ததோர்ச வந்தனை
உன்னி யூகி கான்விறகி
லொள்ளெரிப்ப டுத்தனன்.
(இ - ள்.) யூகி நீள நினைந்து உதயண
மன்னன் சிறைக்கோட் பட்டமைக்கு மனநொந்து இறந்தொழிந்தான்
என்னுமொரு செய்தியைப் பலர் வாயிலாய்ப் பன்முறையும்
கூறுவிக்குமாற்றால் முறையே யாண்டும் பரப்பி நாட்டின்கண்
தன்னுடைய உருவத்தோடு ஒப்புமையுடையதொரு பிணத்தை
ஊரறியக் கொடுபோய்ச் சுடுகாட்டில் ஈம
நெருப்பிலிடுவித்தான். கான் - காடு; சுடுகாடு. (65)
யூகி பிறரறியாவண்ணம் அவந்தி நாடேகுதலும்
பகைமன்னர்
நாட்டினைப் பற்றிக் கோடலும்
70. தன்ன கர்பு லம்பவெங்குந்
தன்னை யுங்க ரத்தலின்
உன்னி வந்து மாற்றரச
ரோங்கு நாடு பற்றினர்
என்ற றிந்து யூகியு
மினிச்சி றையின் மன்னனைச்
சென்ற வட்காண் டுமென்று
தேய முன்னிச் சென்றனன்.
(இ - ள்.) இங்ஙனமொரு சூழ்ச்சி செய்தபின்னர்
யூகி தன்னகர மாந்தரும் யாண்டும் அழாநிற்பத் தன்னை
யாருமறியாதபடி
|