பக்கம் எண் :

36உதயணகுமார காவியம் [ உஞ்சைக் காண்டம்]


வெறிகொள்ளச் செய்ய முனைந்தான் என்க. அனலும் கதம் எனினுமாம். (79)

இதுவுமது

84. வாளொடு கைவில் லேந்தி

வயந்தகன் றன்னோ டெண்ணித்

தோளன தோழன் கூடத்

தூபத்துக் கேற்ற வத்தும்

வேளையீ தென்று கொண்டு

விரகினாற் கயிறு பற்றித்

தாளொத்த கொம்மை மீதிற்

றரத்தினா லிழிந்தா னன்றே.

(இ - ள்.) பாக்கத்தை எய்திய யூகி தகுந்த செவ்வி இஃதென்றுட் கொண்டு வயந்தகனோடு கூடி ஆராய்ந்து துணிந்து தனது தோள்போன்றுதவு மியல்புடைய தோழனாகிய அவ்வயந்தகனும் தன்னோடு வர மயக்கமருந்திட்டுப் புகையூட்டுதற்கு வேண்டிய பொருள்களோடு வாட்படையையும் கையிலேந்திச் சென்று உபாயமாகக் கயிறொன்றினை வீசி அதனைப் பற்றிக் கொண்டு மதிலின்மேலேறி யானைக்கால் போன்ற மதிலுறுப்பாகிய கொம்மையின் மேலிறங்கித் தன்னாற்றலாலே அரண்மனையகத்துட்புக்கான் என்க. (80)

நளகிரியென்னும் அக்களிற்றியானையின் செயல்

85. ஆனைதன் னிலைகண் டெய்தி

யகிலிடும் புகையு மூட்டிச்

சேனைமன் னகர ழித்துச்

சிறைவீடுன் கடனே யொன்று

மானநல் யூகி யானை

செவியின்மந் திரத்தைச் செப்ப

யானைதன் மதக்கம் பத்தி

லருந்தளை யுதறிற் றன்றே.

(இ - ள்.) அரண்மனையின்கண் அவ்வரசனுடைய பட்டத்தி யானை யாகிய நளகிரியினைப் பிணிக்கும் கொட்டிலைத் தேடிக் கண்டு அதனூடு சென்று அகிற்புகையோடு மருந்துப்புகையு மூட்டி அந்நளகிரியின் செவியிலே “களிற்றரசே! படைகள் மிக்க பிரச்சோதன மன்னனுடைய இந்நகரத்தைச் சிதைத்தழித்து நங்கோமகனைச் சிறைவீடு செய்தல் நினது தலையாய கடமைகாண்! அக்கோமகன் நுங்கள்பாற் பேரன்புடையனல்லனோ!” என்று செவியறிவுறுத்துப்