பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்45


மக்கட்கு அரிய வித்தைகளை உணர்த்தலாயினான் என்க. பெருவலி, அன்மொழி.

உதயணன் பிரச்சோதனன் மக்கட்கு வித்தை கற்பித்தல்

103. வேந்தன்றன் மக்கட் கெல்லாம்

வேன்முதல் பயிற்று வித்தும்

பூந்துகில் செறிம ருங்குற்

பொருகயற் கண்ணி வேய்த்தோள்

வாய்ந்தவா சவதத் தைக்கு

வருவித்தும் வீணை தன்னைச்

சேர்ந்தவ ணிகரி லின்பிற்

செல்வனு மகிழ்வுற் றானே.

(இ - ள்.) பிரச்சோதனன் வேண்டுகோட்கிணங்கிச் செல்வ மிக்க வுதயணகுமரனும் அவனுடைய மைந்தர்களுக்கெல்லாம் வேல் முதலாய படைக்கலவித்தைகளை நன்கு பயிற்றியும் பூவேலை நிரம்பிய துகிலுடுத்த நுண்ணிடையும் மூங்கில் போன்ற மென்றோளும் வாய்ந்த ஒன்றனோடொன்று போரிடுகின்ற கயல் மீன் போன்ற கண்ணையுடைய வாசவதத்தைக்கு யாழ்வித்தை நன்குவரப் பயிற்றியும் அவர்களுடன் பெரிதும் உறவு பூண்டு நிகரற்ற இன்பத்தாலே மகிழ்ந்திருந்தான் என்க. (99)

மன்னன் மைந்தர் அரங்கேறுதல்

104. உரையினி லரிய னாய

வுதயண குமர னோர்நாள்

அரசிளங் குமரர் வித்தை

யண்ணனீ காண்க வென்ன

வரைநிகர் யானை யூர்ந்து

மாவுடன் றேரி லேறி

வரிசையிற் காட்டி வாள்வில்

வகையுடன் விளக்கக் கண்டான்.

(இ - ள்.) சொல்லொணாப் பெருமையுடையவனாகிய உதயணகுமரன் ஒருநாள் பிரச்சோதனனைக் கண்டு “பெருமானே! நீ நின்மைந்தர் பயின்று முற்றிய வித்தையையெல்லாம் அரங்கேற்றிக் கண்டருள்க,” என்று கூறாநிற்ப அம்மன்னனும் அவ்வாறே மக்கள் அரங்கேற்றங்காண்பவன் அம்மக்கள் மலைபோன்ற யானையேறி