ஊர்ந்தும் குதிரையேறியும்
தேரிலேறியும் முறைமையாகத் தங்கள் வித்தையின்
சிறப்புக்களைக் காட்டிப் பின்னர் வாளும்
வில்லும் பிறவுமாகிய படைக்கல வித்தைகளும் செய்து
காட்டக் கண்டு மகிழ்ந்தனன் என்க. (100)
வாசவதத்தை யாழரங்கேறுதல்
105. வாசவ தத்தை வந்து
மன்னனை யிறைஞ்ச நல்யாழ்
பேசவை தளரக் கேட்டுப்
பெருமக னினிய னாகி
ஆசிலா வித்தை யெல்லா
மாயிழை கொண்டா ளென்றே
ஏசவன் சிறைசெய் குற்ற
மெண்ணுறேல் பெருக்க வென்றாள்.
(இ - ள்.) பின்னர் வாசவதத்தை
நல்லாள் வந்து தந்தையை வணங்க அவன்
வாழ்த்துப்பெற்றுப் புகழ்ந்து நின்ற
அவ்வாசவதத்தை இசைத்த யாழி னின்னிசையுங் கேட்டு
உதயணனைச் சிறை செய்தமை குறித்து அப்பேரவையோர்
இரங்கி மனந்தளர்ந்திருப்ப, அப்பிரச்சோதனன்
பெரிதும் இன்பமுற்று ‘ஆ! ஆ! குற்றமற்ற யாழ்வித்தை
முழுதும் எஞ்சாமல் இவ்வாசவதத்தை அறிந்து
கொண்டாள்’ என்று பாராட்டி ஆசிரியனாகிய
உதயணனை நோக்கி, “பெருந்தகாய!் இப்பேருலகம்
என்னை இகழ்ந்து பேசும்படி யான் உன்னை வலிய
சிறையிலிட்ட எனது குற்றத்தைப் பெரிதும்
நின்னெஞ்சத்தே எண்ணாது விட்டருள்க” என்று
வேண்டினன். (101)
வாசவதத்தை யாழிசையின் மாண்பு
106. விசும்பியல் குமரர் தாமும்
வியந்துட னிருப்பப் புல்லும்
பசும்பொனி னிலத்தில் வீழப்
பாவையர் மயக்க முற்றார்
வசம்படக் குறுக்கி நீட்டி
வரிசையிற் பாட லோடும்
அசும்பறாக் கடாத்து வேழத்
தரசனு மகிழ்ந்தா னன்றே.
(இ - ள்.) அவ்வவையிலுள்ளோர்
இசையின் வயப்பட்டுத் தம்மை மறப்பவும்,
வானத்திலியங்குகின்ற கந்தருவன் மைந்தர்
|