(இ - ள்.) பூவும் நல்ல தளிர்களுஞ் செறிவுற்று
எண்ணிறந்த பொழில்கள் சூழப்பெற்று விளங்குகின்றதொரு
நாவல் என்னும் மரமுண்மையாலே அந்த மரத்தின் பெயரே
தன் பெயராகக் கொண்டு விளக்கமெய்தி நிலைபெற்று
நின்று மேலும், தீவுகளும் கடல்களும் ஒன்றற்கொன்று
இவ்விரண்டு மடங்கு அளவுடையனவாகத் தன்னைச் சூழ்ந்துள்ள
இந்த நாவலந்தீவு இந்தப் பேருலகமாகிய சங்கீன்ற
நன்முத்துப் போன்று திகழ்வதாம் என்க. (2)
வத்தவநாடு
7. வேதிகை சிலைவ ளைத்து
வேதண்ட நாணே றிட்டுப்
போதவும் வீக்கி னாற்போற்
பொற்புடைப் பரதந் தன்னில்
ஓதிய தரும கண்டத்
தோங்கிய காவு நின்று
வாதத்தாற் சுகந்தம் வீசும்
வத்தவ னாட தாமே.
(இ - ள்.) உவர்க்கடலுக் கப்பாலுள்ள
சுவராகிய வில்லை வளைத்து வெள்ளிப் பெருமலையாகிய
நாணை யேற்றி மிகுதியாக வளைத்து வைத்தாற்போன்ற
தோற்றப் பொலிவினையுடைய இப்பரதகண்டத்தின்கண்,
தருமகண்டம் என்று கூறப்பட்ட பகுதியிலுள்ள நாடுகளில்
வைத்து, வானுற வளர்ந்துள்ள பொழில்கள் நிலைத்து
நின்று தம் மணத்தை நாற்றிசையினும் காற்றினாலே
பரப்புதற் கிடனான அந்த நாடு வத்தவன் நாடு என்னும்
பெயருடைய நன்னாடாகும் என்க. (7)
கோ நகரம்
8. இஞ்சிமிக் கெழுந்தே யோங்கி
யிலங்கிய வமர லோகம்
எஞ்சலி லெல்லை காணா
வெழில்பெற நிற்ற னோக்கி
அஞ்சலில் வருக வென்றே
யணிபெற விலங்கி நீண்ட
குஞ்சிநன் கொடிக்க ரத்தாற்
கூவியிட் டழைக்கு மன்றே.
(இ - ள்.) அந்த நாட்டின் தலைநகரத்தைச்
சூழ்ந்துள்ள மதில்கள் மிகவும் உயர்ந்து விளங்குவன
வானவருலகத்தின் குறை |