வற்ற எல்லையைக் கண்டு அழகுற நிற்றலைக்
கண்டு அவ்வானவர் நாடு அஞ்சுதலாலே அவ்வெல்லையிலேயே
நின்று நீ ஈண்டு வருவாயாக!
என்று தம்முச்சியிலே அழகுண்டாகத் திகழ்ந்து
நீண்டு நிற்கின்ற தம்
கொடிகளாகிய கையை அசைத்துக் கூப்பிடுவன போற்
றோன்றின என்க.
இதனோடு, ?இஞ்சி மாக நெஞ்சுபோழ்ந்
தெல்லை காண வேகலின், மஞ்சுசூழ்ந்து கொண்ட ணிந்து
மாக நீண்ட நாகமும், அஞ்சு நின்னை யென்றலி னாண்டு
நின்று நீண்டதன், குஞ்சி மாண்கொ டிக்கையாற் கூவி
விட்ட தொத்ததே? எனவரும் சிந்தாமணிச் செய்யுளை
(143) ஒப்பு நோக்குக. அமரலோகம் அஞ்சலில் என்க. (4)
இதுவுமது
9 முகிறவழ் மாட மீதின்
முத்தணி மாலை நான்றே
இகலுறு மமளி யின்மே
லெழின்மங்கை மைந்தர் தாமும்
பகலிர வின்றிப் போகம்
பண்பினாற் றுய்த்தி ருப்பார்
நகரிகௌ சாம்பி யென்னு
நாமமார்ந் திலங்கு மன்றே.
(இ - ள்.) அந்நகரத்தின் முகில்கள்
தவழாநின்ற வாயின் மாடத்தின்மீது முத்துக்களாலியன்ற
அழகிய மாலைகள் தொங்க விடப்பட்டு, ஊடுதற்கிடனான
படுக்கையின்மேல் அழகிய மகளிரும் மைந்தரும் பகல்
இரவென்னும் வேற்றுமையின்றி எப்பொழுதும் காமவின்பத்தை
அதற்குரிய நலங்களோடு நுகர்ந்திருப்பாராக; அந்நகரமானது
?கௌசாம்பி? என்னும் இசைதிசை போய பெயரோடு
பொருந்தித் திகழ்வதாயிற்று என்க. (5)
அரசன்
10. ஊனுமிழ்ந் திலங்கும் வேலா
னுன்னத முகிலெ ழுந்து
வானுமிழ் வாரி யன்ன
வண்கையன் வண்ட ரற்றும்
தேனுமி ழலங்கற் றோளான்
செல்வத்திற் குபேர னன்னான்
தானுமிழ் கிரண மார்பன்
சதானிகனரச னாமே.
|