(இ - ள்.) அவ்வத்தவ நாட்டிற்குப்
பகைவருடைய ஊனைச் சுவைத்துக் கொப்பளித்து வெற்றியால்
விளங்குகின்ற வேற்படை ஏந்தியவனும், முகிலானது வானத்திலே
கருவுற்றெழுந்து மழை பொழியுமாறு போல இரவவலர்க்குப்
பொருளை வழங்குகின்ற வள்ளன்மையுடைய கைகளை யுடையவனும்
வண்டுக ளிசைபாடுதற் கிடனான தேன்துளிக்கும் மலர்மாலையை
அணிந்த தோளையுடையவனும், செல்வச் சிறப்பினாலே
குபேரனை ஒத்தவனும் அணிகலன்கள் வீசுகின்ற ஒளியையுடைய
மார்பினையுடையவனும் ஆகிய சதானிகன் என்பவன்
அரசனாவான் என்க. (6)
கோப்பெருந்தேவி
11. மன்னவ னுள்ளத் துள்ளாண்
மாமணி மயிலஞ் சாயல்
அன்னமென் னடைவேற் கண்ணா
ளருந்ததி யனைய ஙங்கை
பொன்னணி சுணங்கு பூத்த
புணர்முலை யமிர்த மன்னாள்
மின்னு நுண் ணிடையா ணாம
மிகாவதி யென்று மிக்காள்.
(இ - ள்.) அச்சதானிக வேந்தன் நெஞ்சிலே
உறையும் கோப்பெருங்தேவியோ, பெண்டிருள் சிறந்த
மாணிக்கம் போல்பவளும் மயில் போன்ற சாயலையும்
அன்னம் போன்ற நடையினையும் வேல் போன்ற கண்ணையும்
உடையவளும், கற்பினால் அருந்ததியை ஒத்தவளும் ஆவள்;
பொன் போன்ற தேமல் படர்ந்த புணர்தற்கினிய
கொங்கையையுடைய அந்நங்கை மன்னனுக்கு அமிழ்தம்
போல்பவளாம், மின்னல் போன்ற நுண்ணிய
இடையையுடைய அவ்வரசி ?மிருகாபதி? என்னும் பெயரோடு
புகழால் மிக்கு விளங்குவாளாயினள் என்க. (7)
12. கற்புடைத் திருவி னங்கை
காரிகை தன்வ யிற்றிற்
சற்புரு டொருவன் வந்து
சார்ந்தவ தரித்து மி்க்க
நற்புடைத் திங்க ளொன்பா
னன்கமைந் திருக்கு மோர்நாட்
பொற்புடை மஞ்ச மீதிற்
பொலிவுட னிருந்த போழ்தில். |