உதயணன் முதலியோர் ஊர் நோக்கி
நடந்து செல்லல்
115. உவளகத் திறங்கிச் சென்றே
யூர்நிலத் தருகு செல்லப்
பவளக்கொப் புளங்கள் பாவை
பஞ்சிமெல் லடியிற் றோன்றத்
தவளைக்கிண் கிணிகண் மிக்க
தரத்தினாற் பேச லின்றித்
துவளிடை யருகின் மேவுந்
தோழிதோள் பற்றிச் செல்வாள்.
(இ - ள்.) பிடியானை இறந்த பின்னர்
உதயணன் முதலியோர் தம்மூர் நிலத்தினருகே
செல்லுதற் பொருட்டுப் பள்ளமான நிலத்திலே
இறங்கி நடந்து செல்லுங்காலத்தே பாவை போல்
வாளாகிய வாசவதத்தையின் அலத்தக மூட்டிய
மெல்லடியில் சிவந்த கொப்புளங்கள்
தோன்றுதலாலே தவளை வாய் போன்ற வாயையுடைய
கிண்கிணிகள் பண்போடு ஒலித்தலின்றி
நுடங்குமிடையையுடைய அச் செல்வி தன் பக்கலிலே
வருகின்ற காஞ்சன மாலையின் தோளினைப் பற்றிக்
கொண்டு சென்றாள் என்க. இறங்கிச் சென்று -
இறங்கிச் செல்ல. (111)
வயந்தகன் அவர்களை வீட்டுப் புட்பகம்
போதல்
116. பாவைதன் வருத்தங் கண்டு
பார்த்திபன் பாங்கி னோங்கும்
பூவைவண் டரற்றுங் காவுட்
பூம்பொய்கை கண்டி ருப்ப
வாவுநாற் படையுங் கொண்டு
வயந்தகன் வருவே னென்றான்
போவதே பொருளூர்க் கென்று
புரவல னுரைப்பப் போந்தான்.
(இ - ள்.) வாசவதத்தையின்
நடைவருத்தங் கண்டு உதயண மன்னன் மனங் கசிந்து
பக்கத்திலே உயர்ந்துள்ள நாகணவாய்ப் புள்ளும்
வண்டுகளும் இசை பாடுதற் கிடனானதொரு பூம்
பொழிலினகத்தே மலர்ந்த பொய்கை யொன்றனைக்
கண்டு அதன் கரையிலே இளைப்பாறி வாசவதத்தை
முதலியோரோடு இருப்ப; அப்பொழுது வயந்தகன்
உதயணனை வணங்கிப் பெருமானே யான் புட்பக நகர்
சென்று விரைகின்ற குதிரை முதலிய நான்கு படைகளும்
கொண்டு வருவேன். அதுகாறும் பெருமான் இளைப்பாறுக!
என, அது கேட்ட மன்னனும் அங்ஙனம் நீ ஊர்க்குச்
செல்வது
|