இரண்டாவது
இலாவாண காண்டம்
(ஆசிரிய விருத்தம்)
நூலாசிரியர் நுதலிப்புகுதல்
121. உஞ்சைநகர் விட்டகன் றுதயணகு மாரனும்
தஞ்சமாய்ச் சயந்தியிற்
றளர்வின்றிப் புகுந்தபின்
என்செய்தன னென்றிடி னியம்புதும் மறியவே
கொஞ்சுபைங் கிளிமொழிதன் கூடலை
விரும்பினான்.
(இ - ள்.) நமரங்காள!் இனி நீயிர்
உதயணகுமரன் உஞ்சை நகரத்தை விட்டு இவ்வாறு
சயந்தியைப் புகலிடமாய்க் கொண்டு அதன்கண்
மனந்தளராமல் புக்கபின்னர் யாது செய்தனன்? என்று
வினவுதிராயின் நுமக்கு அறியக் கூறுவேம் கேண்மின!்
சயந்தி நகரத்தே அவ்வுதயணன் திருமணம் புரிந்து
கொண்டு கொஞ்சிப் பேசுகின்ற கிளிபோலும்
மொழியினையுடைய அவ்வாசவதத்தையோடு கூடி
மகிழ்தலைப் பெரிதும் விரும்பினான் என்க. (1)
உதயணன் வாசவதத்தையை மணம் புணர்தல்
122. இலங்கிழைநன் மாதரை
யினிமைவேள்வித் தன்மையால்
நலங்கொளப்பு ணர்ந்தனன்
நாகநற் புணர்ச்சிபோல்
புலங்களின்மி குத்தபோகம்
பொற்புடன் னுகர்ந்தனன்
அலங்கலணி வேலினா
னன்புமிகக் கூரினான்.
(இ - ள்.) மலர் சூடிய
வேற்படையேந்தியவனும் வாசவதத்தையின்பால்
மாபெருங் காதல் மிக்கவனுமாகிய உதயணகுமரன்
விளங்காநின்ற அணிகலன்களையுடைய பேரழகியாகிய
வாசவதத்தையைக் காண்போர்க்கு இனிமை தருகின்ற
திருமண வேள்வி முறைமையாலே நன்மை மிக மணந்தனன;்
பின்னர் ஐம்புலவின் பங்களும் ஒருங்கே மிக்க
காமவின்பத்தை நாக நாட்டினர் புணர்ந்தின் புறுமாறு
போலே புணர்ந்து பொலிவுண்டாக நுகர்ந்தனன் என்க.
(2)
|