பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்55


இதுவுமது

123. கைம்மிகுகா மங்கரை காண்கிலன் னழுந்தலில்
ஐம்மிகும் கணைமத னம்புமீக் குளிப்பவும்
பைம்மிகும்பொ னல்குலாள் படாமுலை புணையென
மைம்மிகுங் களி ற்றரசன் மாரன்கட னீந்துவான்.

(இ - ள்.) ஐந்துமலரம்புகளாலே வெற்றியில் மிகுகின்ற காமவேள் எய்கின்ற அம்மலர்க் கணைகள் தன்மேற் பாய்ந்தூடுருவா நிற்ப அவற்றிற்கு ஆற்றாதவனாய் அளவு கடந்து மிகாநின்ற காமக் கடற்கு எல்லை காணாதவனாய் அக்கடலின்கண் முழுகுதலாலே பாம்பின் படத்தினும் அழகுமிகுகின்ற அல்குலையுடைய வாசவதத்தையின் தளராத முலைகளையே அக்காமக்கடல் நீந்தும் தெப்பமாகக் கொண்டு மயக்கமிக்க களிற்றினையுடைய உதயணகுமரன் அக்காமக் கடலை இடையறாது நீந்தா நின்றான் என்க. மை - கருமையுமாம். (3)

உதயணன் கழிபெருங்காமத் தழுந்திக் கடமையை நீத்தல்

124. இழந்ததன் னிலத்தையும்

மெளிமையுந் நினைத்திலன்

கழிந்தறமு மெய்ம்மறந்து

கங்குலும் பகல் விடான்

அழிந்தியன்பிற் புல்லியே

யரிவையுடை நன்னலம்

விழுந்தவண் மயக்கத்தில்

வேந்தனினிச் செல்கின்றான்.

(இ - ள்.) இவ்வாறு காமக் கடலில் விழுந்த வேந்தன் பகை மன்னர் கைப்பற்றினமையாலே தான் இழந்துவிட்ட தன்னாட்டினையும் தனது சிறுமையையும் நினைத்திலன்; அரசனாகிய தனக்குரிய அறத்தையும் கைவிட்டு இரவும் பகலும் இடையறாது அவ்வாசவதத்தையைப் பிரியாமல் அவ்வரிவையினுடைய பேரின்பத்திலே பெரிதும் அழுந்தி அன்பாலே தழுவி மயக்கத்தில் விழுந்து கிடப்பானாயினன். (4)

யூகியின் செயல்

125. ஒழுகுங்காலை யூகியா முயிரினுஞ் சிறந்தவன்
எழில்பெருகுஞ் சூழ்ச்சிக்க ணினியதன் வரவதாற்
பழுதின்றிச் சிறைவிடுத்துப் பாங்குபுகழ் வத்தவன்
எழின்மங்கை யிளம்பிடி யேற்றியேகக் கண்டவன்.