பக்கம் எண் :

56உதயணகுமார காவியம் [ இலாவாண காண்டம்]


(இ - ள்.) உதயணன் செயலிங்ஙனமாகிய காலத்தே அவன் உயிரினுஞ் சிறந்தவனும், அழகு மிகும் தனது சூழ்ச்சியில் அவ்வுதயணனுக் கினிமையாகிய தான் உஞ்சைக்கு வந்தது குறைவின்றி உதயணனைச் சிறைவீடு செய்து பக்கத்தார் பாராட்டிப் புகழ்தற்குக் காரணமாக வத்தவநாட்டரசனாகிய அவ்வுதயணகுமரன் வாசவ தத்தையாகிய அழகிய நங்கையை இளமையுடைய பிடியானை மிசை ஏற்றிக் கொண்டு போகும்படி செய்தவனும் ஆகிய அந்த யூகி என்னும் அமைச்சன் என்க. (5)

இதுவுமது

126. மிஞ்சிநெஞ்சி லன்புடன்

மீண்டுவர வெண்ணினன்

உஞ்சைநகர்க் கரசன்கேட்

டுள்ளகத் தழுங்கினன்

விஞ்சுபடை மேலெழாமை

விரகுட னறிந்தந்த

உஞ்சையெல்லை விட்டுவந்து

யூகிபுட்ப கஞ்சென்றான்.

(இ - ள்.) உதயணன் பிரிந்தமையாலே அவன்பால் அன்பு மிகுந்த நெஞ்சத்தோடு யூகிதானும் மீண்டும் வத்தவ நாட்டிற்கு வர நினைத்தான். அச்செவ்வியில் பிரச்சோதனன் யூகியின் செயலிது வென்று ஒற்றர் கூறக்கேட்டு மனம் புழுங்கினன்; யூகி அவன் கருத்தறிந்து அம்மன்னவனுடைய மிக்க படைகள் தன்மேல் போர்க்கு எழுமுன்பே உபாயமாக அந்த உஞ்சை நகரத்தின் எல்லையைக் கடந்து வந்து வத்தவநாட்டுப் புட்பக நகரத்தை அடைந்தான் என்க. (6)

யூகி இடபகன்பால் உதயணனைப் பற்றி வினாதலும் அவன் விடையும்

127. இடபகற்குத் தன்னுரை

யினிதுவைத்து ரைத்துப்பொன்

முடியுடைய நம்மரசன்

முயற்சியது வென்னென

பிடிமிசை வருகையிற்

பெருநிலங் கழிந்தபின்

அடியிட விடம்பொறாமை

யானைமண்ணிற் சாய்ந்ததே.