பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்57


(இ - ள்.) ஆண்டுப் புட்பக நகரத்திருந்த இடபகனுக்குத் தான் உஞ்சையிற் செய்தனவெல்லாம் இனிதே அவனைத் தனியிடத்து வைத்துக் கூறி அறி்வித்த பின்னர், யூகி இடபகனை நோக்கி பொன்முடியணிந்த நம்மன்னவன் உதயணன் இப்பொழுது செய்வது யாதென்று வினவ அவ்விடபகன் “நண்பனே! நம்பெருமான் உஞ்சையினின்றும் பிடியேறி ஊர்க்கு வரும்பொழுது மிக்க நிலத்தைக் கடந்து வந்தபின்னர் அப்பிடியானையைப் பற்றிய நச்சு நோய் அது நிலத்தில் அடிவைக்கப் பொறாமல் அதனை நலிதலாலே அப்பிடியானை நிலத்திலே வீழ்ந்திறந்தது” என்றான் என்க. விடம் - விடநோய். (7)

இதுவுமது

128. சவரர்தாம் வளைந்ததும்

தாமவரை வென்றதும்

உவமையில் வயந்தகன்ற

னூர்வந்துடன் போந்ததும்

தவளவெண் கொடிமிடை

சயந்தியிற் புகுந்ததும்

குவிமுலைநற் கோதையன்பு

கூர்ந்துடன் புணர்ந்ததும்.

(இ - ள்.) பின்னும் அக்காட்டினில் வேடர்கள் குழுமிவந்து உதயணனை வளைத்துக் கொண்டதனையும் ஒப்பற்ற வயந்தகன் காட்டினின்றும் தன் நகரமாகிய புட்பகத்திற்கு வந்து உடனே சென்ற தனையும் உதயணன் அவர்களை வென்றதனையும், பின்னர் வெண்கொடி செறிந்த சயந்திநகரத்தே உதயணன் முதலியோர் புகுந்ததனையும், பின்னர்க் குவிந்த முலைகளையும் மலர்மாலைகளையுமுடைய வாசவதத்தைபாற் காதல் மிகுந்த அவளுடன் திருமணம் புணர்ந்த செய்தியினையும் கூறினன் என்க. (8)

இதுவுமது

129. இழந்தபூமி யெண்ணில னினியபோகத் தழுந்தலும்
குழைந்தவ னுரைப்பயூகி கூரெயிறி லங்கநக்கு
விழைந்தவேந்தன் றேவியை விரகினாற் பிரித்திடின்
இழந்தமிக் கரசியல்கை கூடுமென வெண்ணினான்.

(இ - ள்.) பகைவர் கைப்பற்றியதனாற் றான் இழந்துவிட்ட நாட்டையும் நினைந்திலனாய் இனிய காமநுகர்ச்சியிலே அழுந்திக் கிடத்தலையும் இடபகன் நெஞ்சு நெகிழ்ந்து கூற அதுகேட்ட யூகி கூர்ந்த தன் பற்கள் திகழும்படி நகைத்துத் தன்னுள் நம்மரசன்