பக்கம் எண் :

58உதயணகுமார காவியம் [ இலாவாண காண்டம்]


இவ்வாறு பெரிதும் விரும்பியுள்ள வாசவதத்தையை அவனிடத்தினின்றும் யாதானுமோருபாயத்தாலே பிரித்துவிடின் அவன் இழந்திருக்கின்ற அரசியல் அவனுக்குக் கைகூடிவருவதாம்; இல்லையே லில்லை என்று எண்ணினான் என்க. (9)

யூகியின் செயல்

130. சாங்கிய மகளெனுந் தபசினியைக் கண்டுடன்
ஆங்கவ ளறியக்கூறி யானயூகி தன்னுயிர்
நீங்கினது போலவு நின்றமைச்சர் மூவரும்
பாங்கரசன் ரூபமும் படத்தினில் வரைந்தனன்.

(இ - ள்.) பின்னர் யூகி சாங்கியத்தாய் என்னும் தவமூதாட்டியைக் கண்டு அவளுக்குத் தன் கருத்தெல்லாம் தெரியக் கூறியான பின்னர் யூகி ஒரு படத்தின்கண் தன்னுயிர் நீங்கிவிட்டாற் போன்ற தன் பிணத்துருவினையும் ஏனைய மூன்றமைச்சர் உருவங்களையும் அவ்வமைச்சர் பக்கத்தே உதயணன் உருவத்தையும் வரைந்தனன் என்க (இவ்வரலாறு முதனூலினின்றும் சிறிது வேறுபடுகிறது). (10)

இதுவுமது

131. படத்துருவி லொன்றினைப்

பரந்தமேற்கண் ணாகவைத்

திடக்கணீக்கி யிட்டுமிக்

கியல்புடன் கொடுத்துடன்

முடிக்கரசற் கறிவியென்ன

முதுமகளும் போயினள்

இடிக்குரனற் சீயமா

மிறைவனையே கண்டனள்.

(இ - ள்.) பின்னர் யூகி அப்படத்திலமைந்த அரசன் உருவத்தில் ஒரு கண்ணைப் பரந்து மேனோக்கும் கண்ணாக அமைத்து இடக்கண்ணை அழித்துப் பண்போடு அப்படத்தினைச் சாங்கியத்தாயின் பாற் கொடுத்து “அன்னாய்! நீ இப்படத்தைக் கொண்டுபோய் அரசனுக்குக் காட்டுக!” என்று வேண்ட அத்தவமுதுமகளும் சென்று இடிபோல் முழங்கும் அரிமானேறு போன்ற உதயணனைக் கண்டனள் என்க. (11)

சாங்கியத்தாய் அரசனைக் கண்டு வினாதல்

132. வேந்தனுங்கண் டேவிரும்பி

வினயஞ்செய் திருக்கெனப்

பாந்தவக் கிழவியும்

பண்பினிய சொல்லிப்பின்