பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்61


சாங்கியத்தாய் வாசவதத்தையை யூகி இருக்கைக்கு
அழைத்து வருதல்

137. நிலந்திகழ் சுருங்கையி னீதிமன்னன் றேவியை
இலங்குசாங்கி யம்மக ளெழில்பெறக் கொண்டுவந்
தலங்கலணி வேலினா னமைச்சன் மனைசேர்த்தனள்
துலங்கிவந் தடிபரவிச் சொல்லினிது சொல்லினான்.

(இ - ள்.) உவளகமாளிகையிற் றீக்கொளுவியபொழுதே நீதி மிக்க உதயண மன்னன் மனைவியாகிய வாசவதத்தையை (யூகி அறிவித்தபடி) தவவொழுக்கத்தால் விளங்குகின்ற சாங்கியத்தாய் நிலத்தினூடு திகழ்கின்ற சுருங்கை வழியினூடே அழகுற அமைத்துக் கொண்டுவந்து எதிர்பார்க்கின்ற மாலையணிந்த வேற்படையினை யுடைய அமைச்சனாகிய யூகி கரந்துறைந்த மனையிற் சேர்த்தாள் என்க. (17)

யூகி வாசவதத்தையை வரங் கேட்டல்

138. என்னுடைநற் றாயேநீ யெனக்கொரு வரங்கொடு
நின்னரச னின்னைவிட்டு நீங்குஞ்சில நாளன்றி
நன்னில மடந்தைநமக் காகுவது மில்லையே
என்னவுடன் பட்டன ளியல்புடன் கரந்தனன்.

(இ - ள்.) வாசவதத்தை வந்து சேர்ந்தவுடன் யூகி அவள் திருமுன்சென்று வணங்கி அடியேனுடைய அன்புமிக்க அன்னையே! நீ அடியேனுக்கு ஒரு வரந்தருதல் வேண்டும். அஃதியாதெனில் நீ என் வேண்டுகோட்கிணங்கி மன்னனைச் சிலநாள் பிரிந்துறைதல் வேண்டும். (அஃதெற்றுக்கெனின்) நின் தலைவன் நின்னைப் பிரிந்து தனித்துறையும் சில நாளில் அல்லது, நாமிழந்த நல்ல நிலமடந்தை மீண்டும் நம்மை அடையமாட்டாள் (ஆதலின்) என்று வேண்ட அப்பெருமகளும் யூகியின் வேண்டுகோட்கிணங்கினள். ஆதலின் அப்பெருந்தேவியோடு யூகி மறைவானாயினன் என்க. (18)

உதயணன் மீண்டுவந்து வருந்துதல்

139. சவரர்வந்து தீயிட்டெனத் தஞ்செயலி னாக்கிமிக்
கவகுறிகள் கண்டரச னன்பிற்றேவிக் கேதமென்
றுவளகத் தழுங்கிவந் துற்றகரு மஞ்சொலக்
கவற்சியுட் கதறியே கலங்கிமன்னன் வீழ்ந்தனன்.

(இ - ள்.) உதயணகுமரன் காட்டினின்று மீண்டும் விரைந்து வரும் வழியிலே தீச்சகுனங்களும் நிமித்தங்களும் மிக மிகக் கண்டு கேட்டு இவற்றால் தன்னன்பிற்குரிய வாசவதத்தைக்குத் துன்பமுண்டாகுமென்றுணர்ந்து பெரிதும் வருந்தி அவள் உறை