பக்கம் எண் :

62உதயணகுமார காவியம் [ இலாவாண காண்டம்]


கின்ற உவளக மருங்கே வந்துழி ஆங்கு நின்ற அமைச்சர்கள் தீக்கொளுவினமையைத் தம் பகைவரான வேடர் வந்து தீயிட்டுப் போயினர் என அவர் செயலில் வைத்து ஆங்கு நிகழ்ந்த பிறவற்றையும் கூற அது கேட்ட உதயணன் கவலையுள் அழுந்தி வாய்விட்டுக் கதறியழுது நெஞ்சு கலங்கி நிலத்தின்மேற் சாய்ந்தனன் என்க. அமைச்சர் சவரர் வந்து தீயிட்டென வவர்தஞ் செயலினாக்கி உற்ற கருமஞ் சொல எனக்கொண்டு கூட்டியும் வருவித்தும் கூறிக் கொள்க. (19)

இதுவுமது

140. பூண்டமார்ப னன்னிலம் புரண்டுமிக் கெழுந்துபோய்
மாண்டதேவி தன்னுடன் மரித்திடுவ னானென்றான்
நீண்டதோ ளமைச்சரு நின்றரசற் பற்றியே
வேண்டித்தா னுடனிருந்த வெந்தவுடல் காட்டென்றான்.

(இ - ள்.) அணிகலன் கொண்ட மார்பை யுடைய உதயணகுமரன் அந்த நிலத்திலே கிடந்து புரண்டழுது துயரம் மிகுந்து எழுந்து யான் இனி உயிர்வாழேன், தீயில் மாண்ட வாசவதத்தை யோடொருங்கே இத்தீயில் விழுந்து இறந்தொழிவேன் என்று தீயை நோக்கி விரைந்துழி, விழிப்புடன் நின்ற நெடிய கைகளையுடைய உருமண்ணுவா முதலிய அமைச்சர்கள் உதயணனை விடாது பற்றிக் கொள்ளவே அவர்களிடமிருந்து உருமண்ணுவாவை வேண்டி, நண்பனே! வெந்து கரிந்த அவ்வாசவதத்தையின் உடம்பையேனும் எனக்குக் காட்டுதி! என்றான் என்க. (20)

உதயணன் வாசவதத்தையின் அணிகலன்கண்டழுதல்

141. கரிப்பிணத்தைக் காண்கிலர்

காவலர்க ளென்றபின்

எரிப்பொன்னணி காட்டென

வெடுத்துமுன்பு வைத்தனர்

நெருப்பிடை விழுந்தமை

நினைப்ப மாயமன்றென

விருப்புடைநற் றேவிக்கு

வேந்தன்மிக் கரற்றுவான்.

(இ - ள்.) அதுகேட்ட அமைச்சர்கள் பெருமானே! கரிப்பிணத்தைக் காவல் மன்னர் கண்ணாற் காண்டல் அறக்கழிவாம்; என்று மறுப்பப் பின்னர் உதயணன் மனஞ்சுழன்று ஐய! அந் நல்லாள் அணிந்திருந்த தீப்பிழம்பன்ன பொன்னணிகலங்களையேனும் எனக்குக் காட்டுக! என்று வேண்ட அமைச்சர்கள் அங்கு வாசவதத்தை கைவிட்டுப்போன பொன்னணிகலங்களை ஆராய்ந்