தெடுத்துக் கொணர்ந்து அரசன் முன்பு
வைத்தனர். அவற்றைக் கண்ட உதயணகுமரன் தேவி
தீயிடைச் சிக்கி மாண்டது நினைக்குங்கால்
வாய்மையே என்று கருதித் தன் காதலையுடைய நல்ல
தேவியாகிய அவ்வாசவதத்தையின் பொருட்டுப்
பின்னரும் மிகவும் அழுது புலம்பினன் என்க. (21)
உதயணன் மனம் நொந்து அழுது புலம்புதல்
142. மண்விளக்க மாகிநீ வரத்தினெய்தி வந்தனை
பெண்விளக்க மாகிநீ பெறற்கரியை
யென்றுதன்
கண்விளக்கு காரிகையைக் காதலித்
திரங்கவான்
புண்விளக் கிலங்குவேற் பொற்புடைய
மன்னவன்.
(இ - ள்.) பகைவர் மார்பிற்
புண்திறந்து காட்டும் விளக்க முடைய
வேற்படையினையுடைய அழகுடைய உதயணமன்னன்
வாசவதத்தையை நினைத்து நங்காய!் நீ பிரச்சோதன
மன்னன் செய்தவத்தினாற் பெற்ற வரமாகப்
பிறந்தனையே! இப்பேருலகிற்கு ஒரு விளக்காகவும் நீ
பிறந்தனை! அம்மட்டோ? நீ பெண்குலத்தின்
பெருவிளக்காகவு மிருந்தனையே! அந்தோ! பெறற்கரிய
பெண்ணருங்கலமே! என்று தன் கண்களைத் தன்
பேரெழிலாலே விளக்கும் பெண்டகையாளைப் பெரிதும்
அவாவி அழுவான் என்க. (22)
இதுவுமது
143. மானெனும் மயிலெனும்
மரைமிசைத் திருவெனும்
தேனெனுங் கொடியெனுஞ்
சிறந்தகொங்கை நீயெனும்
வானில மடந்தையே
மாதவத்தின் வந்தனை
நானிடர்ப் படுவது
நன்மையோநீ வீந்ததும்.
(இ - ள்.) பின்னரும்
மான்போல்வாளே! என்பான். மயில் போல்வாளே!
என்பான். தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள்
போல்வேளே! என்பான். தேன்போலும் எனக்கினிய
சேயிழையே! என்பான். பூங்கொடி போல்வாளே!
என்பான். சிறந்த கொங்கையுடைய தெரிவையே ந!ீ
என்பான். வானுலகத்துத் தெய்வ மடந்தை போல்வாளே!
யான் செய்த தவத்தின் பயனாக எனக்கு மனைவியாக
வந்தனை. அளியேன் இவ்வாறு இடர்ப்படுவது நினக்கு
அறமாமோ? என்னைவிட்டு நீ மாண்டதுவும் நினக்குத்
தகுமோ? என்றும் அழுவான் என்க. (23)
|