வரவழைத்துக் காட்டும் வித்தையிலும்
மிக்கவன் ஆதலால் யாம் இனி அம்மகதநாடு சென்று
அவனைக் காண்பாம் என்றனன் என்க. (26)
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய
விருத்தம்
உதயணகுமரன் நாற்படையும் சூழ மகதநாடு
செல்லுதல்
150. வத்தவ குமரன் கேட்டு வயந்தகன் றன்னை
நோக்கி
அத்திசை போவோ மென்றே யகமகிழ்ந்
தினிய கூறி
வெற்றிநாற் படையுஞ் சூழ வெண்குடை கவரி
மேவ
ஒத்துடனிசைந்து சென்றான் உதயண குமரன்
றானே.
(இ - ள்.) வயந்தகன் மகதத்தில்
இறந்தாரை மீட்டுத் தரும் துறவி யொருவனுளன் என்று
கூறிய மொழி கேட்டு உதயணகுமரன் மனம் பெரிதும்
மகிழ்ந்து அவ்வயந்தகனை நோக்கி அங்ஙனமாயின்
ஒரு தலையாக அந்நாட்டிற்கு யாம் போகக் கடவேம!்
என்றுடன்பட்டு அவ்வமைச்சனுக்கு முகமன் பல கூறி
வெற்றியுடைய நால்வேறு படைகளும் தன்னைச்
சூழ்ந்துவரவும் வெண்குடை நிழற்றவும் கவரி
யிரட்டவும் அமைச்சருடன் கூடி மகதநாடு நோக்கிச்
சென்றான் என்க. (30)
இலாவாண காண்டம் முற்றிற்று.
|