பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்73


உதயணகுமரன் மகதமன்னனைக் கண்டு கேண்மை கோடல்

163. யானறிந் துரைப்ப னென்றே யரசனைக் கண்டு மிக்க
மாநிதி காட்டி நன்மை மகதவ னோடுங் கூடி
ஊனமில் விச்சை தன்னா லுருமண்ணு பிரித லின்றிப்
பானலங் கிளவி தன்னாற் பரிவுட னிருக்கு நாளில்.

(இ - ள்.) அங்ஙனமிருப்புழி உதயணகுமரன் பதுமாபதியைப் பிரிந்து ஒருநாள் அரண்மனைக்குச் சென்று தருசக மன்னனைக் கண்டு நின் தந்தை வைத்துப் போன பொருளை யான் குற்றமற்ற வித்தை யுண்மையாலே அறிந்து கூறுவேன் என்று கூறி அவனுடம்பாடு பெற்று காண்டற்கரிய அப் பொருளையும் அவனுக்குக் காட்டி நன்மை மிக்க அவ்வரசனோடு கேண்மை கொண்டவனாய் உருமண்ணுவாவினைப் பிரியாமல் பால்போலும் நன்மையுடைய மொழிகளையுடைய பதுமாபதியின் பிரிவினால் வருந்தி யிருக்கின்ற காலத்தில் என்க. (13)

சங்க மன்னர்கள் மகதநாட்டின் மேற் படையெடுத்து வருதல்

164. அடவியா மரசன் மிக்க

வயோத்தியர்க் கிறைவன் றானைப்

படையுறு சாலி யென்பான்

பலமுறு சத்தி யென்பான்

முடிவிரி சிகையன் மல்லன்

முகட்டெலிச் செவிய னென்பான்

உடன்வரு மெழுவர் கூடி

யொளிர்மக தத்து வந்தார்.

(இ - ள்.) அடவி மன்னன்; மிக்க அயோத்தி வாழும் மாந்தர்க்கரசன், மிக்க படைகளையுடைய சாலியரசன், ஆற்றல் மிக்க சத்தியரசன், முடிக்கலன் அணிந்த விரிசிகை மன்னன், மல்லன், முகட்டில் வாழும் எலிச்செவியன் என்னு மன்னன் ஆகிய இந்த ஏழு மன்னர்களும் ஒருங்குகூடி விளங்குகின்ற அந்த மகத நாட்டிலே போரிட வந்தனர் என்க. (14)

அம்மன்னர் நாடழித்தல்

165. தருசகற் கினிதி னாங்க

டருதிறை யிடுவ தில்லென்

றெரியென வெகுண்டு வந்தே

யினியநா டழிக்க லுற்றார்