பக்கம் எண் :

76உதயணகுமார காவியம் [ மகத காண்டம்]


தருசகன் உதயணனை எதிர்சென்று கேண்மை கோடல்

171. ஆரா வுவகையுள் ளாகி யரசனும்
பேரா மினியயாழ்ப் பெருமகன் றன்னையே
சேரா வெதிர்போய்ச் சிறந்து புல்லினன்
நேரா மாற்றரை நீக்குவ னென்றான்.

(இ - ள்.) நுகர்ந்தாராத பெருமகிழ்ச்சியுள் முழுகிய அத்தரு சகமன்னனும் புகழுடைய இனிய யாழறிபுலவனாகிய உதயண மன்னனை அப்பொழுதே எதிர்சென்று வரவேற்று மகிழ்சிறந்து தழுவிக் கொண்டனன். இனி உதயணன்றானும் மகிழ்ந்து நினக்குத் திறைப்பொருள் கொடாத நின் பகைமன்னர்களை யானே சென்று துரத்தி விடுவேன் என்று கூறினன் என்க. (21)

வேறு
உதயணன் படையுடன் சென்று பகைவரை வெல்லுதல்

172. உலம்பொருத தோளுடை

யுதயண குமரனும்

நலம்பொருத நாற்படையு

நன்குடனே சூழப்போய்ப்

புலம்பொருத போர்ப்படையுட்

பொருதுதவத் தொலைத்துடன்

நலம்பெறத் திறையுட

னரபதியு மீண்டனன்.

(இ - ள்.) திரள்கல்லை யொத்த தோள்களையுடைய அவ்வு தயணகுமரன் நன்மை சேர்ந்த தேர்முதலிய நான்கு படைகளும் தன்னைச் சூழ்ந்து வருமாறு போர்மேற் சென்று அந்நாட்டினில் வந்து அழிவு செய்த அப்பகைப் படையுட் புகுந்து பெரிதும் அழித்து அப் பகைமன்னர் தோல்வியுற் றஞ்சித் திறைப்பொருள் அளித்து வணங்குதலாலே அந்நாட்டிற்கு நன்மையுண்டாகும்படி மீண்டனன் என்க. (22)

தருசகன் உதயணனுக்குப் பதுமாபதியை மணஞ்செய்து
கொடுத்தல்

173. வருவவிசை யத்துடன்

வத்தவற் கிறைவனைத்

தருசகனெ திர்கொண்டு

தன்மனை புகுந்துபின்