176. சத்தியகா யன்னுடன் சாலவு மமைச்சரை
வெற்றிநாற்ப டைத்துணை வேந்தவன்பிற் செல்கென
முற்றிழைநல் அரிவைக்கு முகமலரச் சீதனம்
பற்றின்பி னாலளித்துப் பாங்குடன்
விடுத்தனன்.
(இ - ள்.) சத்தியகாயன்
என்பவனையும் அழைத்து அவ்வமைச்சரை நோக்கி
நீவிரெல்லாம் வெற்றியையுடைய நால்வேறுபடைகளுடன்
துணையாக உதயண மன்னன் பிற் செல்வீராக! என்று
கட்டளையிட்டுப் பின்னர் நிறைந்த அணிகலன்
அணிந்த தங்கையாகிய பதுமாபதியும் முகமலர்ந்து
மகிழும்படி சீதனம் வழங்கும் முறைமை பற்றி நிரம்ப
வழங்கி முறைப்படி விடைகொடுத்து விட்டனன் என்க.
(26)
177. வெல்லுமண்ணலை ம்மிக வேந்தனன்
னயஞ்சில
சொல்லிநண்பி னாலுரைத்துத்
தோன்றலை மிகப்புலிச்
செல்கெனா விடுத்தரச்
செல்வனங்குப் போந்தனன்
எல்லைதன்னா டெய்துழி
யினியதம்பியர் வந்தனர்.
(இ - ள்.) செல்லும் போர்தொறும்
வெல்லுமியல்புடைய உதயண வேந்தனை நோக்கி அம்மகத
வேந்தன் மிகவும் அழகிய நயமொழிகள் சில கூறிக்
கேண்மையாலே அப்புகழாளனை மிகவும் பொருந்தத்
தழுவிக் கொண்டு பின்னர் நீ இனி நின்
நாட்டிற்குச் செல்க! என்று விடை யீந்து விடுப்பச்
செல்வமிக்க உதயண நம்பியும் தன் நாடு நோக்கிச்
சென்று தன் நாட்டின் எல்லையை அடைந்துழி, இனிமை
மிக்க தம்பியராகிய பிங்கலகடகரும் அங்கு
வந்துதமையனொடு கூடினர் என்க. புலி-புல்லி.
இடைக்குறை. (27)
பிங்கல கடகர் படைகொடு வருதல்
178. பிங்கல கடகரெனப்
பீடுடைக் குமரரும்
தங்குபன்னி ராயிரம்
தானைவல்ல வீரரும்
அங்குவந்தவ் வண்ணலை
யடிவணங்கிக் கூடினர்
பொங்குபுறங் கௌசாம்பியிற்
போர்க்களத்தில் விட்டனர்.
(இ - ள்.) பிங்கலனும் கடகனும் என்று
கூறப்படுகின்ற அந்தப் பெருமைமிக்க இளைஞரும்
தம்பாலிருந்த பன்னீராயிரம் படை
|