பக்கம் எண் :

80உதயணகுமார காவியம் [ மகத காண்டம்]


தாலே அவ்வாருணி மன்னனுக்குத் துணையாக வந்திருந்த ஒலிக்கின்ற வீரக் கழலணிந்த அரசர் பலரையும் போர்க்களத்தில் ஆருணிக்குத் துணைபுரியாமல் பிரித்து விட்டனனாக; அவ்வாருணி மன்னனும் உதயணன் படை வரவுணர்ந்து அணிவகுத்துள்ள நால்வேறு படைகளுடனும் பெரிதும் போரை விரும்பி வந்து உதயண குமரனை எதிர்த்தனன்; அப்பொழுது அந்த ஆருணி மன்னனும் உதயணனும் ஆகிய இரு பேரரசரும் தத்தம் வில்லிலமைத் தேவிய அம்புகள் வானத்திலியங்கும் அந்த ஞாயிற்று மண்டிலத்தின் ஒளியை மறைத்தன என்க. (30)

வேறு
போர் நிகழ்ச்சி

181. விரிந்த வெண்குடை வீழவும்

வேந்தர் விண்ணுற வேறவும்

பரிந்து பேய்க்கண மாடவும்

பலவா நரிபறைந் துண்ணவும்

முரிந்த முண்டங்க ளாடவும்

முரிந்த மாக்களி றுருளவும்

வரிந்த வெண்சிலை மன்னவன்

வந்த வன்கண் சிவந்தவே.

(இ - ள்.) அப்பொழுது அப் போர்க்களத்திலே ஆருணி.யரசன் படை நடுவே விரிந்த வெள்ளைக் குடைகள் விழும்படியும் மன்னர்கள் துறக்கம் புகும்படியும் பேய்கள் உணவு கிடைத்ததென்று மகிழ்ந்து ஆடாநிற்பவும் நரிகள் பலவும் ஊளையிட்டுக் கொண்டு ஊன் உண்ணாநிற்பவும்; தலையழிந்த முண்டங்கள் ஆடவும் தோற்றபெரிய களிறுகள் களத்திலுருண்டுயிர் நீப்பவும் வரிந்து கட்டிய வெள்ளிய வில்லையுடைய உதயண மன்னன் கண்கள் வென்க. (31)

உதயணன் ஆருணி மன்னனைக் கொன்று வீழ்த்துதல்

182. மாற்ற வன்படை முறிந்தென

மன்ன வன்படை யார்த்திடத்

தோற்ற மன்னன்வந் தெதிர்த்தனன்

றூய காளைதன் வாளினால்

மாற்ற லன்றனைக் கூற்றுண

வண்மை யிவ்விருந் தார்கென

ஏற்ர வகையினி லிட்டன

னிலங்கு வத்தவ ராசனே.