பக்கம் எண் :

86உதயணகுமார காவியம் [ வத்தவ காண்டம்]


மலர்மாலை யணிந்த தெய்வம் ஒன்று ஒரு வெள்ளிய காளைபடுத்திருக்கின்ற பொகுட்டினை யுடையதொரு வெண்டாமரை மலரைக் கொணர்ந்து தன் கையிற் கொடுப்பக்கண்டனன் என்க. (6)

உதயணன் ஒரு முனிவனிடம் சென்று கனவின் பயன் வினாதல்

192. கங்குலை நீங்கி மிக்கோர்

கடவுளை வினவச் சொல்வார்

அங்கயற் கண்ணி் தானு

மாரழல் வீந்தா ளல்லள்

கொங்கைநற் பாவை தன்னைக்

கொணரநீ பெறுவை யின்பம்

இங்குல கெங்கு மாளு

மெகழிற்சுதற் பெறுவ ளென்றார்.

(இ - ள்.) உதயணன் அந்த இரவு கழிந்த வழிநாளிலே ஊக்கமிக்க ஒரு துறவியின்பாற் சென்று அக்கனவின் பயன் யாதென வினவ, அத்துறவி கனவுப் பயன் கூறுபவர், வேந்தே! கேள், அழகிய கயல்மீன் போன்ற கண்ணையுடைய வாசவதத்தை நிறைந்த நெருப்பிலே அகப்பட்டு இறந்தாளலள்; இன்னும் உயிருடனிருகின்றனள்காண்! அழகிய கொங்கைகளையுடைய நல்ல பாவைபோல்வாளாகிய அவ்வாசவதத்தையைச் சிலர் நின் பால் அழைத்து வருதலாலே அவளை நீ மீண்டும் எய்தி அவளோடு இன்னும் இன்பம் நுகர்வைகாண்! அவ்வரசிதானும் இந்நகரத்தின் கண்ணே பிறவுலகங்களையும் ஆளுகின்ற ஊழுடைய ஓர் அழகிய ஆண்மகளைப் பெற்றெடுப்பள் காண்!, இவையே அக்கனவின் பயன் என்று இயம்பினர் என்க. (8)

உதயணன் கனாப்பயன் கேட்டுக் களிகூர்தல்

193. வெள்ளிய மலையின் மீதே

விஞ்சைய ருலக மெல்லாம்

தெள்ளிய வாழி கொண்டு

திக்கடிப் படுத்து மென்ன

ஒள்ளிய தவத்தின் மிக்கோ

ருறுதவ ருரைத்த சொல்லை

வள்ளலு மகிழ்ந்து கேட்டு

மாமுடி துளக்கி னானே.