பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்87


(இ - ள்.) அவ்வாசவதத்தை ஈனும் மகன் வெள்ளிப் பெருமலையின் உச்சியிலுள்ள விச்சாதரர் உலக முழுவதையும் ஒளியாற்றெளிவுற்ற தனது ஆணைச்சக்கரத்தாலே எல்லாத் திசைகளையும் தன்னடிப் படுத்துவன் காண்! என்று புகழ்மிக்க தவப்பள்ளியிலுறைகின்ற வித்தையான் மிக்கவரும் மிக்கதவத்தை யுடையவருமாகிய அத்துறவியார் கூறிய மொழியைக் கேட்டு வள்ளலாகிய அவ்வுதயண குமரனும் மனமகிழ்ந்து தனது சிறந்த தலையை அசைத்தனன் என்க. (8)

உருமண்ணுவா சிறைவீடு பெற்றது

194. என்றவ ருரைப்பக் கேட்டே

யிறைஞ்சிநன் கடிப ணிந்து

சென்றுதன் கோயில் புக்குச்

சேயிழை பதுமை தன்னே

டொன்றினன் மகிழ்ந்து சென்னா

ளுருமண்ணு வாவு முன்பு

வென்றிவேன் மகதன் மாந்த

ரால்விடு பட்டி ருந்தான்.

(இ - ள்.) நின்புதல்வன் ஆழிகொண்டு அடிப்படுத்தும் ’ என்று அம்முனிவர் கூறக்கேட்டு உதயண குமரன் அம் முனிவர் அடிகளில் வீழ்ந்து நன்கு அன்புடன் வணங்கித் தன்னரண்மனை சென்று ஆங்குச் செவ்விய அணிகலன் அணிந்த பதுமாபதியோடு உளமொன்றிக் கலந்து மகிழ்ந்திருக்கின்ற நாளிலே முன்பு மகத நாட்டின்கண் சங்க மன்னரால் சிறைகொளப்பட் டிருந்த உருமண்ணுவா என்னும் நல்லமைச்சன்றானும் வெற்றி வேலேந்திய அம் மகத மன்னனுடைய சான்றோரால் சிறைவீடு பெற்று அம்மகத நாட்டிலேயே உறைந்தனன் என்க. (9)

உருமண்ணுவா உதயணன்பால் வருதல்

195. மீண்டவன் வந்தூர் புக்கு

வேந்தனை வணங்கி நிற்பக்

காண்டறி வாள னென்றே

காவலன் புல்லிக் கொண்டு

மாண்டவன் வந்த தொப்ப

வரிசையின் முகமன் கூறி

வேண்டவாந் தனிமை தீர்ந்தே

விரகுட னின்புற் றானே.