பக்கம் எண் :

90உதயணகுமார காவியம் [ வத்தவ காண்டம்]


ஏர்பெறும் வாச வெண்ணெ

யெழிலுடன் பூசி வாச

நீர்மிக வாடி மன்ன

னேரிழை மாதர்க் கூட.

(இ - ள்.) மகிழ்ச்சியுற்ற உதயணமன்னன் யூகியின்பால் பேரார்வமுடையவனாய் நன்மையுடைய வியத்தகு முகமன் மொழிகளைக் கூறிப் பாராட்டிச் சிறப்புடைய நல்ல கோப்பெருந்தேவியாகிய வாசவதத்தையோடும் அரண்மனைக்குச் சென்று ஆங்கு அழகிய நறுமண வெண்ணெயை அழகுறப் பூசி நறுமண நீரிலே ஆடி, நேரிய அணிகலன் அணிந்த அவ்வாசவதத்தையுடன் கூடா நிற்ப என்க. (14)

பதுமாபதியின் வேண்டுகோள்

200. யூகியு நீரி னாடி

யுற்றுட னடிசி லுண்டான்

நாகநேர் கால மன்ன

னன்குட னிருந்த போழ்தின்

பாகநேர் பிறையா நெற்றிப்

பதுமையு மிதனைச் சொல்வாள்

ஏகுக செவ்வித் தந்தை

யெழின்மனைக் கெழுக வென்றாள்

(இ - ள்.) இனி, யூகியும் அங்ஙனமே தன் நோன்பினைமுடித்து நன்னீரிலே குளித்துச் சென்று உதயணகுமரனுடன் ஒருங்கிருந்து அறுசுவையடிசிலுண்டு யானையை ஒத்த நோன்றாண் மன்னனோடு வீற்றிருந்த காலத்தே பாதித்திங்கள் போன்ற நெற்றியையுடைய பதுமாபதி நங்கை மன்னனைத் தொழுது “பெருமானே! அடிச்சியுடன் அளவளாவியிருந்த அத்துணைக்காலம் இனிய பருவத்தாற்றிகழா நின்ற வெம்பெருமாட்டி வாசவதத்தையாருடைய மாளிகையிலேவதிக! எழுந்தருள்க!” என்று வேண்டினள் என்க. (15)

உதயணன் வாசவதத்தை மாளிகைக்கெழுந்தருளலும்,
அவள் ஊடுதலும்

201. என்றவள் சொல்ல நன்றென்

றெழின்முடி மன்னன் போந்து

சென்றவண் மனைபு குந்து

செல்வனு மிருந்த போழ்தின்