பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்91


வென்றிவேற் கண்ணி னாளும்

வெகுண்டுரை செப்பு கின்றாள்

கன்றிய காமம் வேண்டா

காவல போக வென்றாள்.

(இ - ள்.) ‘தத்தையார் மனைக்கெழுந்தருள்க’! என்று பதுமாபதி வேண்டிக்கொண்டவளவிலே அழகிய முடியணிந்த அம்மன்னனும் பதுமாபதியின் பெருந்தகைமையைக் கருதி நன்று! நன்றென்று பாராட்டி அவ்வண்ணமே வாசவதத்தையின் மாளிகைக்குச் சென்று ஆண்டோரிருக்கையின்கண் இருந்தபொழுது வெற்றியையுடைய வேல்போலுங் கண்ணையுடைய அவ்வாசவதத்தை பெரிதும் வெகுண்டு கூறுபவள், “வேந்தே! நம்பாற் கன்றிய காமத் தொடர்பு இனி வேண்டா! பெருமான் விரும்பியவாறே யாண்டேனும் செல்க!” என்று ஊடினள் என்க. (16)

உதயணன் வாசவதத்தை ஊடலைப் போக்குதல்

202. பாடக மிரங்கும் பாதப் பதுமையி னோடு மன்னன்
கூடிய கூட்டந் தன்போற் குணந்தனை நாடி யென்ன
ஊடிய தேவி தன்னை யுணர்வினு மொளியினாலும்
நாடினின் றனக்கன் னாடா னந்திணை யல்ல ளென்றான்

(இ - ள்.) ஊடிய வாசவதத்தையை நோக்கி, மன்னவன் “நங்காய்! பாடகங்கிடந்து திகழும் அடிகளையுடைய அந்தப் பதுமாபதியோடு யான் கூடிய கூட்டத்திற்குக் காரணம் அம்மடந்தைபால் நின்னுடைய குணம்போன்ற நற்குணமிருக்கக் கண்டமையாலேதான்; இதற்கு நீ வெகுளாதேகொள்!” என்று கூறவும் அது கேட்டுப் பின்னரும் ஊடுகின்ற அவ்வாசவதத்தையை நோக்கி, “நங்காய்! நற்குணத்தாலே அவள் நின்னை ஒப்பாளாயினும், உணர்வுடைமையினும் ஒளியுடைமையிலும் ஆராய்ந்து காணுமிடத்து அந்தப் பதுமாபதி ஆக்கமான ஒப்புமையுடையள் ஆகாள்காண்!” என்றான் என்க. நந்து - ஆக்கமுறுகின்ற. (17)

உதயணன் வாசவதத்தை யூடல்தீர்த்துக் கூடுதல்

203. நங்கைதன் மனங்க லங்கா நலம்புகழ்ந் தூட னீக்கி
வெங்களி யானை மற்றப் பிடியொடு மகிழ் வதேபோற்
பொங்கிள முலையில் வாசப் பூசுசாந் தழியப் புல்லிச்
சிங்கவே றனைய காளை செல்வியைச் சேர்ந்தா னன்றே.

(இ - ள்.) பின்னரும் அரிமாவேறு போன்றவனும் காளைப் பருவத்தினனுமாகிய அவ்வுதயண குமரன் அவ் வாசவதத்தையின்