இதுவுமது
212. கோமானே யெனவே யென்னைக்
கோடனீ வேண்டு மென்றும்
மாமனான் மருக னீயென்
மாமுறை யாயிற் றென்றும்
ஆமாகும் யூகி தன்னை
யனுப்ப யான் காண்டல் வேண்டும்
பூமாலை மார்ப வென்றும்
பொறித்தவா சகத்தைக் கேட்டான்.
(இ - ள்,) பெருமானே நீ அப்பிழை
பொறுத்து என்னை நின் தந்தையாகிய சதானிக
வேந்தனுக்குச் சமமாக நினைத்தல் வேண்டும்
என்றும், யான் இப்பொழுது நினக்கு மாமன் என்றும்
நீ தானும் என்னருமை மருகன் என்றும் உலகினர்
கூறுகின்ற பெரிய கேண்மை நம்முள்
உண்டாயிற்றன்றோ ஆம், இன்னும் அக் கேண்மை
ஆக்கமெய்தும், அது நிறிக, இனி நின்
நல்லமைச்சனாகிய யூகியை நீ என்பால் உய்க்க
அவ்வறிஞனை யான் காண்டலும் வேண்டும்! மலர்மாலை
யுடைய மார்பையுடையோய் இஃதென் வேண்டுகோள்
என்றும் வரையப்பட்டிருந்த மொழிகளை உதயண மன்னன்
திருச்செவி யேற்றருளினன் என்க. (27)
யூகி உஞ்சைக்குப் போதலும்
பிரச்சோதனன் வரவேற்றலும்
nbsp;;; 213. மன்னவ னனுப்ப யூகி
மாநக ருஞ்சை புக்கு
மன்னர்மா வேந்தன் றன்னை
வணங்கினன் கண்டிருப்ப
மன்னனு முடியசைத்த
மைச்சனை நெடிது நோக்கி
மன்னிய வுவகை தன்னான்
மகிழ்வுரை விளம்பி னானே.
(இ - ள்.) திருமந்திரவோலை
வாயிலாகப் பிரச்சோதன மன்னன் வேண்டிய
வேண்டுகோட் கிணங்கி வத்தவ மன்னனும் யூகியை
உய்த்தலாலே அவ்வமைச்சன் கோநகரமாகிய
உஞ்சைமாநகர்க்குச் சென்று ஆங்குப்
பிரச்சோதனன் திருமுன் எய்தி வணங்கியவனாய்
அம்மன்னன் காட்டிய இருக்கையி லமர்ந்திருப்ப
அந்த யூகியின் வருகையாலே மனமகிழ்ந்த
அம்மன்னவன் பேரழகுடைய அவ்வமைச்சன்
நீண்டபொழுது பார்த்துத் தன்றிருமுடியை அசைத்துத்
|