என்ப; அசை. “கொடுங்கோற் கோவலர்“ என்றார் முல்லையினும். இது நெய்தலோடு மருதத்திற்கும், முல்லையோடு குறிஞ்சிக்கும் மயக்கங்கூறியது. புலம் என்பது ஈண்டு கழனியைக் குறிக்கு மாகலின் புலவர் என்பது உழவர்க்குக் காரணப்பெயர். கைவினைப் புலவர்-வெளிப்படை. குரவை கைகோத்தாடுங் கூத்து; “குரவைக் கூத்தே கைகோத்தாடல்“ கலவர், புலவர், கோவலர் என்பன அந்தந்த நிலத்து ஆண் மக்களின்பெயர். அசுணமா என்பது புள்ளின் இயல்பும் விலங்கின் இயல்பும்கொண்டது. பறந்து செல்லாது; அது விரைந்து செலும் செலவு பறத்தலைப்போன்றிருக்கும். இஃது இனிய இசைகேட்பின் மகிழும்; பறைஒலி முதலிய பேரொலியைக் கேட்பின் மிக வருந்தும். ‘பறைபட வாழா அசுணமா‘ என்றார் பிறரும். |