[இச் சருக்கத்தின்கண், முன்னேகூறிய சுரமைநாட்டின் தலைநகரமான போதனமா நகரத்தின் சிறப்பும்; அந் நகரத்தின்கண் பயாபதி என்னும் அரசன் இருந்துசெய்யும் அரசியற் சிறப்பும்; அவன் ஆயிரவர்க்கு மேற்பட்ட மகளிரை மணந்து, அவருள்ளும் மிகாபதி, சசி என்ற இருவரை அரசிய ராய்க்கொண்டு இன்புற்றிருந்த சிறப்பும் பிறவுங் கூறப்பெறுகின்றன. முதற்பதினைந்து செய்யுட்கள் நகரச் சிறப்பையும், மற்றைப் பத்தொன்பது செய்யுட்கள் அரசனது சிறப்பையுங் கூறுகின்றன.] |