|
ஆரவாரங்கள் அடங்கின,
கோழியும் ஆர்த்தன குக்கில் ஆர்த்தன -
கோழிகளும் செம்போத்துப் பறவைகளும் கூவின, சூழியில் புள் எலாம்
துள்ளி ஆர்த்த - சுற்றியுள்ள இடங்களில் வாழ்கின்ற பறவை இனங்கள்
எல்லாம் துள்ளி ஆரவாரஞ் செய்தன.
புள்
: பால்பகா அஃறிணைப்பெயர். எலாம் : தொகுத்தல். வெங்
கதிரவன் : பண்புத்தொகை; ஏகாரம் :
ஈற்றசை. கடலும், திங்களும்
ஆர்ப்பு ஒடுங்கின எனக் கூறினர். ஆர்ப்பு - ஒலி. திங்களுக்கு
ஒளிப்பெருக்கம் எனக் கொள்க. ஆர்ப்பு - பெருக்கம்; நிறைவு. குக்கில்
- செம்போத்து. இப் பறவையும் விடியலில் கத்தும் என்று காண்க.
(90)
| |
கதிரோன்
காட்சி |
| 195. |
நம்குலத்
தரசனை நலிந்து பாதகக்
கங்குலைத் திங்களைக் கனன்று தேர்கடாய்
அங்கண்மா ஞாலம்விட் டகற்று வேனெனாச்
செங்கதிர்க் கடவுளும் சிவந்து தோன்றினான்.
|
(இ
- ள்.) நம் குலத்து அரசனை - நமது சூரியகுலத்திலே
பிறந்தவனாகிய அரிச்சந்திரனை, நலிந்த - வருத்தப்படுத்தின, பாதகக்
கங்குலைத் திங்களை - பாவிகளான இரவையும் சந்திரனையும், கனன்று -
கோபித்து, தேர் கடாய் - தேரினைச் செலுத்தி, அங்கண் மா ஞாலம்
விட்டு அகற்றுவேன் எனா - அழகிய இடத்தையுடைய பெரிய உலகத்தை
விட்டு நீக்கிவிடுவேன் என்று, செங் கதிர்க் கடவுளும் சிவந்து
தோன்றினான் - சிவந்த கதிர்களையுடைய சூரியனும் கோபத்தாற் கண்கள்
சிவந்து தோன்றினான்.
கங்குலைத்
திங்களை : உம்மைத்தொகை; கனன்று - கனல் : பகுதி;
ற் : இறந்தகால இடைநிலை; உ : வினையெச்ச விகுதி; மா ஞாலம் :
உரிச்சொற்றொடர்; எனா : செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்;
இயல்பாய்ச் சிவந்த கதிர்களோடு தோன்றுஞ் சந்திரனையும் இரவையும்
கோபித்துச் சிவந்து தோன்றினதாகக் கூறலின் தற்குறிப்பேற்ற அணி.
'கடாய்' என்பது வினையெச்சம். ய் : விகுதி பெற்றது. 'கடாவி' என்பது
பொருள்.
(91)
| |
பகலவன்
ஒளி பாய்தல் |
| 196. |
படர்கெடுத்
தறநிலை பரித்த மன்னனுக்
கிடர்விளைத் தெய்திய இராம டந்தையிப்
புடவிட் டேகினும் போன திக்கெலாந்
தொடர்மின்என் றெண்ணிலாச் சுடரை ஏவினான். |
(இ - ள்.)
படர் கெடுத்து அறநிலை பரித்தமன்னனுக்கு - துன்பம்
நீக்கி அறநெறியைக் காத்த அரிச்சந்திர மன்னனுக்கு, இடர் விளைத்து
எய்திய இரா மடந்தை - துன்பம் விளைத்து வந்து சேர்ந்த இரவாகிய
பெண், இப் புடவி விட்டு ஏகினும் - இந்த உலகினை விட்டு வேறு எங்குச்
|