|
(இ
- ள்.) கொடிய மா மதனையும் கொழு நிலாவையும் நொடியினும்
ஒரு குறை சொல்லி நோகிலான் - கொடிய மன்மதனையும் செழிப்பான
நிலவினையும் ஒரு நொடிபொழுதாயினும் குறை கூறி வருந்தாதவனாகி,
படிகிலா விழியையும் - தூங்காத கண்களையும், பாரில் வேர் நிறீஇ
விடிகிலா இரவையும் வெறுக்கும் வேளையில் - பூமியிலேயே வேர் ஊன்றி
நிறுத்தி விடியாத இராப்பொழுதையும் வெறுக்கும் சமயத்தில்.
இச்
செய்யுள் குளகம். நோகிலான் : முற்றெச்சம்; படிகிலா :
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்; நிறீஇ : சொல்லிசை அள பெடை.
நிலா - நிலவு. "குறியதன் கீழ்ஆக் குறுகலும் அதனோடு உகரம் ஏற்றலும்
இயல்புமாந் தூக்கின்." அரிச்சந்திரன் நிலவையும் மதனையும் வெறுக்காமல்
தன்னிரு விழிகளையும் வேரூன்றி விடியாத இரவையும் வெறுத்தான். நிலவு
காய்வதற்கும் காமன் போர் புரிவதற்கும் இரவும் உறங்கா விழிகளுமே
காரணம் ஆம் என்று கருதினன்.
(88)
| |
செங்கதிர்
வாவெனச் சேவல் கூவல் |
| 193. |
மையலும்
கங்குலும் மதியும் வாட்டவிவ்
வையனோ வெளியனென் றணிவ யிற்றினிற்
கையினா லறைந்துகூய்க் காமர் வாரணம்
வெய்யவா விரையவா எனவி ளித்தவே. |
(இ - ள்.)
மையலும் கங்குலும் மதியும் வாட்ட - மயக்கமும் இரவும்
சந்திரனும் சேர்ந்து துன்புறுத்த, இ ஐயனோ எளியன் என்று - இந்தத்
தலைவனான அரிச்சந்திரன் தாங்குவதற்கு இயலாதவனாக இருக்கிறான்
என்று, காமர் வாரணம் - அழகான கோழிகள், அணிவயிற்றினில்
கையினால் அறைந்துகூய் - அழகிய வயிற்றில் தம் இறகுகளினால்
அடித்துப் கூப்பிட்டு, வெய்யவா விரையவா என விளித்த - சூரியனே
விரைந்து வருவாயாக என்று கூப்பிட்டன.
கோழிகள் இயல்பாகக் கூவுவதைக் கவி அரிச்சந்திரன்
வருத்தத்திற்கு
இரங்கிச் சூரியனைக் கூப்பிட்டதாகக் கூறினமையின் தற்குறிப்பேற்ற அணி.
ஏகாரம் : ஈற்றசை. கோழிச்சேவல் சிறையடிப்பது
துன்பமுற்றவர் வயிற்றிலும்
மார்பிலும் அடிப்பதுபோல இருந்தது எனவும், கூவுவது 'இரவை விரைவில்
நீக்கு' எனச் சூரியனை அழைப்பதுபோலவும் தோன்றியது எனவும் கொள்க.
(89)
| |
வைகறை
நிகழ்ச்சி |
| 194. |
ஊழிவெங்
கதிரவன் உதயம் முன்னறிந்
தாழியும் திங்களும் ஆர்ப்ப டங்கின
கோழியும் ஆர்த்தன குக்கில் ஆர்த்தன
சூழியிற் புள்ளெலாம் துள்ளி ஆர்த்தவே.
|
(இ
- ள்.) ஊழி வெங்
கதிரவன் உதயம்முன் அறிந்து - வெய்யில்
எரிக்கும் கொடிய கதிர்களையுடைய சூரியன் உதிப்பதை முன்னமே
தெரிந்து, ஆழியும் திங்களும் ஆர்ப்பு அடங்கின - கடலும் சந்திரனும்
|