|
| |
துயிலுணர்தல் |
| 190. |
பெருத்தவா
னிலவிடைப் பேதை மாதரைக்
கருத்துறக் காதலர் கலந்து றங்கினார்
வருத்தமும் காதலும் வளர மன்னவன்
ஒருத்தனே தனிக்கிடந் துறக்க நீங்கினான். |
(இ
- ள்.) பெருத்த வான் நிலவிடைப் பேதை மாதரைக் காதலர்
கருத்துறக் கலந்து உறங்கினார் - சிறந்த நிலாப்பரப்பில் மடமை நிறைந்த
பெண்களை அவர்கள் காதலர் அன்புறு மனத்தினராய்க் கலந்து கூடி
உறங்கினார்கள், மன்னவன் ஒருத்தனே வருத்தமும் காதலும் வளரத் தனிக்
கிடந்து உறக்கம் நீங்கினான் - அரிச்சந்திர வரசன் ஒருவனே
மனவருத்தமும் காதலும் மென்மேலும் பொங்கி எழுத் தனிமையாகப்
படுத்திருந்து உறக்கமின்றி இருந்தான்.
ஒருத்தனே
என்பதில், ஏகாரம் பிரிநிலைப்பொருளைத் தந்தது. காதல்
கொண்டவர்க்கு நிலவும் பகையாகும்; உறக்கமும் வாராது. அரிச்சந்திரன்
சந்திரமதிமேற் காதல் கொண்டவன் ஆதலால் உறக்கமின்றி யிருந்தனன்
எனக் காண்க.
(86)
| |
மன்னவன்
காம மயக்கம் |
| 191. |
உருவெளி
நோக்குவ னுவப்ப னுன்னுவன்
கரவினா லேங்குவன் கலங்கு வன்மதி
மரபினா டன்கணென் மனது போம்வழி
இரவுபோ தற்கிடம் இல்லையோ என்பான். |
(இ - ள்.)
உரு வெளி நோக்குவன் உவப்பன் உன்னுவன் -
சந்திரமதியின் உருவத்தை இவ்வாறிருக்குமென வெளியிடத்தில் மனக்
கண்ணாற் கற்பித்து மகிழ்வான் எண்ணுவான், கரவினால் ஏங்குவன்
கலங்குவன் - உருவத்தோற்றம் மனக்கண்ணில் மறைவதனால் ஏங்கிக்
கலங்குவான்; மதி மரபினாள் தன் கண் எனது மனது போம் வழி -
சந்திரமதியிடத்தில் எனது மனம் போகின்ற வழியில், இரவு போதற்கு இடம்
இல்லையோ என்பான் - இராக்காலமும் கழிவதற்கு இடம் இல்லையோ
என்று புலம்புவான்.
நோக்குவன் முதலியன முற்றெச்சம். இல்லையோ :
ஓகாரம் வினாப்
பொருளில் வந்தது. காமமயக்கமுற்றவர், இரவு விரைவாக விடிய
வில்லையே என்று நினைத்துப் புலம்புவது இயற்கை; காதலரைக் கனவிற்
காணுவதும் இயற்கை என்க.
(87)
| |
மன்னன்
தன் விழியையும் இரவையும் வெறுத்தல் |
| 192. |
கொடியமா
மதனையும் கொழுநி லாவையும்
நொடியினு மொருகுறை சொல்லி நோகிலான்
படிகிலா விழியையும் பாரில் வேர்நிறீஇ
விடிகிலா இரவையும் வெறுக்கும் வேளையில். |
|