|
| |
புனல்
விளையாட்டு |
| 201. |
அருவிகள்
ஆடுவார் சுனைகள் ஆடுவார்
வெருவிவந் தகன்கரை மீதில் ஏறுவார்
சருவிநின் றோடியப் புனலில் தாவுவார்
மருமலர் கொய்குவார் மலைந்து மீள்குவார். |
(இ
- ள்.) அருவிகள் ஆடுவார் சுனைகள் ஆடுவார் - (மகளிரும்
ஆடவரும்) அருவிகளிலும் சுனைகளிலும் நீராடுவர், வெருவி வந்து அகன்
கரை மீதில் ஏறுவார் - பயந்து வந்து பரந்த கரைகளில் ஏறுவார்கள்,
சருவி நின்று ஓடி அப் புனலில் தாவுவார் - இருவரும் கிட்டி நின்று ஓடித்
தண்ணீரில் தாவுவார்கள், மரு மலர் கொய்குவார் - (கரையேறி வந்து)
மணம்பொருந்திய மலர் கொய்வார்கள், மலைந்து மீள்குவார் -
அம்மலர்களைச் சூடித் திரும்புவார்கள்.
இவ்வாறு
மலைமேல் பலரும் பலவாறு நீராடியும் மலர் கொய்து
சூடியும் விளையாடித் திரிந்தனர் என்க.
(97)
| |
மலைவளங்
காணல் |
| 202. |
அருவியும்
சுனைகளும் ஆடி நுண்மணல்
மருவிய வண்டலும் மணந்த சோலையும்
பருவரைக் குடுமியும் பளிக்குப் பாறையும்
பொருவிலாப் புனங்களும் புகுந்து நோக்குவார். |
(இ - ள்.)
அருவியும் சுளைகளும் ஆடி - அருவிகளிலும்
சுனைகளிலும் நீராடிவிட்டு, நுண் மணல் மருவிய வண்டலும் - பொடி
மணல் பொருந்திய பொருக்குகளோடும் கூடிய மேட்டு நிலங்களிலும்,
பருவரைக் குடுமியும் - பெரிய மலைச்சிகரங்களிலும், பளிக்குப் பாறையும்
- பளிங்குப் பாறைகளிலும், பொருவிலாப் புனங்களும் - ஒப்பிலாத
தினைப்புனங்களிலும், புகுந்து நோக்குவார் - போய் இயற்கை அழகினைக்
காண்பர்;
நீராடி மலர் பொய்து விளையாடிய மகளிரும் ஆடவரும்
மணல்
மேட்டில் மலையுச்சியிலும் பூஞ்சோலையிலும் பளிங்குபோன்ற
கற்பாறைகளிலும் சிலர் பலராக அமர்ந்து களைப்பாறினர் என்க.
(98)
| |
தேரேறி
மீண்டும் விரைந்து செல்லல் |
| 203. |
அன்றிருந்
தணிவரைச் சாரல் வைகியே
துன்றிருள் விடிந்தபின் சோதி வேலினான்
சென்றிருஞ் சுடர்மணித் தேரிலேறியே
வென்றிவெம் படையொடு விரைந்து போயினான். |
(இ
- ள்.) சோதி வேலினான் - ஒளிபொருந்திய வேல் ஏந்திய
அரிச்சந்திரன், அன்று அணி வரைச் சாரல் வைகி இருந்து - அன்றைக்கு
அழகிய மலைச்சாரலில் தங்கி இருந்து, துன்று இருள் விடிந்த பின் -
|