|
திணிந்த இருள் போய்ப்
புலர்ந்தபின், சென்று இரும் சுடர் மணித் தேரில்
ஏறியே - எழுந்து போய்ப் பெரிய பேரொளி வீசும் அழகிய தேரில் ஏறி,
வென்றி வெம் படையொடு விரைந்து போயினான் - வெற்றி தரும்
கடுமையான படைகளோடு விரைந்து சென்றான் சந்திரமதியின் நகருக்கு.
அரிச்சந்திரன்
தன் படைகளோடு அன்று மலைச்சாரலில் தங்கி
இராப்போது போக்கி விடியலிற் றேரிலேறி விரைந்து மதிதயன் நகர்க்குச்
சென்றான் என்பது.
(99)
| |
தேர்ச்
செலவு |
| 204. |
வேய்இருங்
கானமும் வெற்பி னுச்சியும்
மாயிரும் பொழில்களும் மடிந்து நுண்பொடி
ஆயின விசும்பினை அடைந்த தூளியும்
சேயிருஞ் சுடர்மணித் தேர்கள் செல்லவே. |
(இ - ள்.)
சேய் இருஞ் சுடர் மணித் தேர்கள் செல்ல - மிக
உயர்ந்த பேரொளி வீசும் அழகிய தேர்கள் போகும்போது, வேய் இருங்
கானமும் - பெரிய மூங்கிற் காடும், வெற்பின் உச்சியும் - மலைச் சிகரமும்,
மா இரும் பொழில்களும் - பெரிய சோலைகளும், மடிந்து நுண் பொடி
ஆயின - அழிந்து சிறு துகளாயின, தூளியும் விசும்பினை அடைந்த -
ஆங்கு எழுந்த தூசிகளும் ஆகாயத்தை அடைந்தன.
மாயிரும் - மா + இரும்; மாயிரு ஞாலம் என்புழிப்போல
யகர
உடம்படுமெய் பெற்றது. தேர்கள் சென்ற வழிகளிலெழுந்த புழுதிகள்
வானத்தை யடைந்தன எனவே விரைந்து சென்றன தேர்கள் என்பது
குறிப்பு.
(100)
| |
பொற்றேர்ச்
செலவின் அற்புதக் காட்சி |
| 205. |
செந்நிறப்
பொலன்கதிர்த் தேரின் ஆழியும்
தந்நிறம் அவ்வழி அனைத்தும் ஆதலால்
பன்னிறக் கிரிகளும் பரந்த பாறையும்
பொன்னிற மேருவே போற்பொ லிந்தவே. |
(இ
- ள்.) செந்நிறப் பொலன் கதிர்த் தேரின் ஆழியும் தந்நிறம்
அவ்வழி அனைத்தும் ஆதலால் - (அரிச்சந்திரனுடைய) சிவந்தநிறமான
பொன்னிற ஒளிபொருந்திய தேரின் சக்கரங்களும் அச்சக்கரங்களின்
நிறமும் வழியெங்கும் ஒளிவீசுதலினால், பன்னிறக் கிரிகளும் பரந்த
பாறையும் பொன்னிற மேருவே போல் பொலிந்த - பல நிறமுள்ள
மலைகளும் பெரிய பாறைகளும் பொன்னிறம் பொருந்திய மாமேரு
மலைபோல் விளங்கின.
செந்நிறம்
: பண்புத்தொகை; செம்மை + நிறம்; ஏது அணி. ஏகாரம்
: ஈற்றசை. அரிச்சந்திரன் ஏறிய தேர் பொன்னாற் செய்யப்பட்ட தேர்
ஆதலால் அதன் சக்கரங்கள் பதிந்தவிடமும் அண்மையில் உள்ள
மலையும் பாறையும் பொன்னிறமாகவே தோன்றின என்பது. சக்கரங்கள்
பல ஆதலால் 'தந்நிறம்'
|